ETV Bharat / state

பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்தலும், பேரவை கூட்டமும் ஒரே நேரத்தில் நடத்த எதிர்ப்பு.. பேராசிரியர்கள் வெளிநடப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 6:55 PM IST

Periyar University: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சிப் பேரவை கூட்டமும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுவதைக் கண்டித்து ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

பெரியார் பல்கலைக்கழகம்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஒரு ஆட்சி மன்ற குழு உறுப்பினருக்கான தேர்தல் இன்று (பிப்.13) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் இன்று (பிப்.13) ஆட்சிப் பேரவை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி ஆட்சி மன்ற குழு உறுப்பினருக்கான தேர்தலில், ஒரு பதவிக்கு 3 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில் காலை 11 மணிக்குத் தொடங்க வேண்டிய தேர்தல், ஆட்சி பேரவை கூட்டம் நடத்தியதால் பிற்பகல் வரை நடைபெறாமல் இருந்தது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும், துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் அரசு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்திடத் தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்த பின்னரும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

அதேபோல் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்வதற்குப் பதிலாக அவரை மருத்துவ விடுப்பு அளித்து ஏதோ ஒரு காரணத்திற்காக அவரை பாதுகாக்கப் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றச்சாட்டினர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் தேர்தலும், கூட்டமும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கான காரணம் குறித்து பேராசிரியர்கள் எழுதிய கேள்விக்கு முறையான பதில் அளிக்காததால் பேராசிரியர்கள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் முற்றுகையிட்டு பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: நீதிபதியாகும் முதல் பழங்குடி பெண்; குவியும் பாராட்டுகள்; முதல்வர் வாழ்த்து..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.