ETV Bharat / state

"ஜாஃபர் சாதிக்குடன் திமுக முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு" - பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 11:20 AM IST

Pollachi Jayaraman: திமுக குடும்பத்துக்கு காட்பாதராக ஜாபர் சாதிக் செயல்பட்டு வந்துள்ளதாகவும், திமுகவின் முக்கிய புள்ளிகள் அவரிடம் பணம் பெற்றுள்ளதாகவும் எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

MLA pollachi Jayaraman
பொள்ளாச்சி ஜெயராமன்

கோயம்புத்தூர்: தமிழ்நாடு போதைப் பொருள் கடத்தும் மாநிலமாகத் திகழ்வதாக கூறியும் அதனை தடுக்காத அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று (செவ்வாய்கிழமை) மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கோவையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஜெயராமன், "போதைப் பொருள் கடத்தல் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. அதில் குறிப்பாக, சென்னை மையமாக செயல்படுகிறது. நேற்று முன்தினம் 100 கிலோ கஞ்சா சென்னையிலும், புதுக்கோட்டையில் 81 கிலோ போதைப் பொருள் மற்றும் 180 கிலோ கஞ்சா மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்துள்ளனர்.

இது ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுகிறது. ஆனால் இதை தமிழ்நாடு போலீசார் பிடிக்கவில்லை. டெல்லியில் 2 ஆயிரம் கிலோ உயர் ரக போதை பொருள் பிடிக்கப்பட்டது. இதில் சினிமா தயாரிப்பாளர் கடத்தல் புள்ளி ஜாஃபர் சாதிக் ஈடுபட்டது தெரியவந்து, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் உதயநிதி மனைவி கீர்த்தி உதயநிதி ஜாஃபர் சாதிக் மூலம் படம் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் குடும்பத்துக்கு காட்பாதராக ஜாஃபர் சாதிக் செயல்பட்டு வந்துள்ளார். திமுகவின் முக்கிய புள்ளிகள் ஜாஃபர் சாதிக்கிடம் பணம் பெற்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு விருதுநகரில் அரசு பள்ளி மாணவர்களிடம் சோதனை செய்ததில், 750 கஞ்சா பொட்டலங்கள் பிடிக்கப்பட்டுள்ளது. ஆதலால் மத்தியில் ஆளும் அரசு, திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். மீண்டும் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லதொரு ஆட்சி அமைக்கப்பட்டு, போதை பொருள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு மாற்றப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும், வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூரில் அமுல் கந்தசாமி தலைமையிலும், ஆனைமலை முக்கோணத்தில் வால்பாறை சட்டமன்ற பொறுப்பாளர் ஏ.வி வெங்கடாசலம் தலைமையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி வாசு, ஒன்றிய செயலாளர்கள் ஜி.கே.எஸ், கார்த்திக் அப்புசாமி, மாநில தேயிலைத் தோட்டத் தலைவர் வால்பாறை அமீது, கம்மாளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், வார்டு உறுப்பினர் காஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: இன்டர்போல் உதவியை நாடிய தமிழ்நாடு காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.