ETV Bharat / state

ஜே.இ.இ தேர்வில் முதலிடம் இடம்பிடித்த தமிழக மாணவன்.. அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 6:00 PM IST

Updated : Feb 13, 2024, 10:58 PM IST

JEE Examination: தேசிய முகமை தேர்வு நிறுவனம் நடத்திய ஜே.இ.இ முதன்மை தேர்வில் தமிழக மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்தியத் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Student Mukund Pratesh press conference
மாணவர் முகுந்த் பிரதீஷ் செய்தியாளர்கள் சந்திப்பு

ஜே.இ.இ தேர்வில் முதலிடம் இடம்பிடித்த தமிழக மாணவன்.. அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து..!

திருநெல்வேலி: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களாக என்.ஐ.டி(NIT), ஐ.ஐ.டி(IIT) உள்ளிட்ட கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ (Joint Entrance Examination) எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகாமை நடத்தும் இந்த தேர்வானது மெயின் (முதல்நிலை) மற்றும் அட்வான்ஸ் (முதன்மை தேர்வு) என இரண்டு கட்டங்களாக நடைபெறும். இந்த நிலையில் இந்தாண்டிற்கான 2024 ஆண்டிற்கான ஜே.இ.இ தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

ஜே.இ.இ நடத்திய முதன்மை தேர்வில் 11 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார். இதில் 70 ஆயிரத்து 48 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், அகில இந்தியத் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அதாவது (300/300) முதலிடம் பெற்ற 23 மாணவர்களில் இவர் ஒருவரே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

இவரது தந்தை ஸ்ரீகாந்த் தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தில் பொறியாளராகவும், அம்மா தபால் துறையில் உதவியாளராக இருந்து விருப்ப பணி ஓய்வு பெற்றுள்ளார். ஜே.இ.இ தேர்வில் முதலிடம் பெற்றுள்ள முகுந்த் பிரதீஷ் பாளையங்கோட்டை உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.

இது பற்றி முதல் மாணவனாக வெற்றி பெற்ற முகுந்த் பிரதீஷ் கூறும் போது, "ஜே.இ.இ தேர்வில் முதல் இடம் பிடிப்பவர்கள் எப்படி இதனைச் சாத்தியப்படுத்துகிறார்கள் எனப் பல நேரங்களில் நான் யோசித்து இருக்கிறோன். ஆனால், அந்த இடம் தற்போது தனக்குக் கிடைத்துள்ளது. இந்த சந்தோஷத்தை நான் எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த தேர்வில் முதல் இடம் பிடிப்பதற்காகத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைப்பேசி வாயிலாக வாழ்த்துக் கூறியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வரவிருக்கும் காலத்தில் செமி கண்டக்டர் (semi conductor) பொறியாளராகப் படிக்க ஆசைப்படுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் ஸ்ரீகாந்த் கூறுகையில், “நான் 7 வருடம் ஆசிரியராக பணியாற்றியுள்ளேன். இதனால், மாணவர்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்பது தெரியும். எல்.கே.ஜி வகுப்பு முதல் தற்போது வரை முகுந்த் பிரதீஷ், டியூசன் சென்றதே கிடையாது. அதே போல் எல்லா வேலைகளில் சிறு வயது முதலே திட்டமிட்டு மேற்கொள்வார்.

சமூக வலைத்தளங்களில் சென்றதே கிடையாது. அதில், அவருக்கு விருப்பம் கிடையாது. தற்போது, ஜே.இ.இ தேர்வில் என்னுடைய மகன் முதல் இடம் பிடித்துள்ள மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து ஆசிரியர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக நடைபெறவுள்ள முதன்மை தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஐ.டி-யில் படிக்க வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கைக்கு அனுப்பப்படுவார்.. உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்த மத்திய அரசு!

Last Updated : Feb 13, 2024, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.