ETV Bharat / state

சேலத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்! - one crore old rupees

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 3:57 PM IST

Seizure of old currency notes: சேலத்தில் செல்லாத பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் என சுமார் 1 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மற்றும் சபீர் புகைப்படம்
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மற்றும் சபீர் புகைப்படம் (Credits: ETV Bharat Tamil Nadu)

சேலம்: சேலத்தைச் சேர்ந்த சபீர், பாலாஜி, கோகுலநாதன் உள்ளிட்டோர் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும், கடந்த 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பின்போது இவர்கள் வசம் சுமார் 1 கோடி ரூபாய் வரை இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பணத்தினை தான் மாற்றிக் கொடுப்பதாக தனது பங்குதாரர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் ரூபாய் நோட்டுகளை சபீர் மாற்றிக் கொடுக்கவில்லை. இதனிடையே பாலாஜி என்ற பங்குதாரர் உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பிக் கொடுக்காதது குறித்து கோகுலநாதன் சபீரிடம் கேட்டுள்ளார். அதற்கு பணம் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும், இதனை மாற்றுவதற்கு முயற்சி செய்த போது ஒரு லட்சத்திற்கும் மேல் செலவாகி விட்டதாகவும், அந்த பணத்தை கொடுத்துவிட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கோகுலநாதன், சபீர் மாசி நாயக்கன் பட்டியில் உள்ள அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட போலீசார், சபீரின் வீட்டிலிருந்து 500, 1,000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 1 கோடி செல்லாத ரூபாயை பறிமுதல் செய்தனர். அதோடு, ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்த சபீரைரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: தோழியின் சதி.. தீபக் ராஜாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கூலிப்படை.. முழு பின்னணி! - Deepak Raja Murder Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.