ETV Bharat / state

மீன்பிடி தடைக்காலத்தில் இன்ஜின் படகுகளில் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு! - Fishing Prohibition time

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 8:05 PM IST

Madurai Bench: மீன் பிடி தடைக்காலத்தில் இன்ஜின் பொருத்தப்பட்ட படகுகளில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு ஒருவாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

படகு மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
படகு மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த அசன் முகமது என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் சுமார் 300 பேர் விசைப்படகுகள் வைத்து மீன் பிடி தொழிலை பரம்பரையாக செய்து வருகிறோம்.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசும், மாநில அரசும், நமது நாட்டில் உள்ள கடல் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை அதிகரிக்கும் நோக்கோடும், வருடந்தோறும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 வரை என 61 நாட்கள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை என 61 நாட்கள் வரை மீன் பிடி தடை காலமாக அறிவித்துள்ளது.

மீனவர்களுக்கு இந்த காலத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் மீன் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு, அரசின் உத்தரவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். இந்நிலையில், அரசின் உத்தரவுக்கு எதிராக சிலர் பாரம்பரிய மீன் பிடி படகுகள் என்ற பெயரில், இன்ஜின் பொருத்தபட்ட படகில் மீன் பிடித்து வருகின்றனர். இதனால் மீன் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், கடல் வளம் அழிக்கப்படுகிறது.

இதுகுறித்து மீன் வளத்துறை அதிகாரிகளிடம் முறையான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இயந்திரம் பொருத்தாத பாரம்பரிய படகில் சென்று மீன் பிடிப்பதில் அரசு விலக்களித்துள்ளது. இதனை தவறாகப் பயன்படுத்தி, படகில் இஞ்சின் பொருத்தி மீன் பிடி தொழிலை சிலர் செய்து வருகின்றனர். இவர்கள் மீது தமிழ்நாடு கடல் பராமரிப்புச் சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மீன் படி தடை காலத்தில் இன்ஜின் பொருத்தப்பட்ட படகுகளில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு இன்று அவசர கால வழக்காக நீதிபதிகள் மஞ்சுளா மற்றும் குமரப்பன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, நீதிபதிகள் மீன்பிடி தடைக்காலம் உள்ள நிலையில் இவர்களை மட்டும் எவ்வாறு மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்?

இதனால் மீன்வளம் பாதிக்கப்படும் அல்லவா? எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இதுகுறித்து ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுத்து, இஞ்சின் பொருத்தப்பட்ட படகில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும்? - Dengue Fever Cautions

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.