ETV Bharat / state

காதலும்... காதலர் தினமும்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 6:47 AM IST

Happy Valentines Day: இன்று காதலர் தினம்.. சாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அன்பு என்கிற ஒற்றைச் சொல்லை உயர்த்தி நிற்கும் காதல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

Etv Bharat
Etv Bharat

ஐதராபாத் : இன்று காதலர் தினம்... காதல், விவரிக்க வார்த்தைகள் போதாத ஒரு ஆக சிறந்த உணர்வு, ஏன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அனைத்து உணர்வுகளுக்கும் தலைவன் என்று கூட கூறலாம். உலகின் தோற்றத்துடன் உண்டான காதல், ஒவ்வொரு ஜீவராசிகளுக்குள்ளும் இருக்கிறது.

பல்வேறு தருணங்களின் உறவுகளில் முறைக்கு ஏற்று காதல் விதவிதமாக வெளிப்படுகிறது. மனித இனத்தின் உயரிய இந்த காதலை அனுசரிக்கும் ஒரு நாள் தான் காதலர் தினம். இந்த தினத்தை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற அதற்கான கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு அனுசரிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதியை காதலர் தினமாக கொண்டாடும் நாம், காதலர் தினம் எங்கு எப்போது பிறந்தது என்பதை தெரிந்து கொள்ள மறுந்து விடுகிறோம். ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை வெளியிட்டதாகவும், இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் உத்தரவை மீறி ரகசியமாக அனைவருக்கும் திருமணங்களை நடத்தி வைத்ததாகவும் இதனையறிந்த மன்னன், வாலண்டைனை கைது செய்ததோடு, மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சிறைக் காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும், வாலண்டைனுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், இந்த விவகாரம் சிறைக் காவலருக்கு தெரியவர அஸ்டோரியசை அவர் வீட்டு காவலில் வைத்ததாகவும் கூறப்படுகிறது. சிறையில் காதலியில் நினைவில் புழம்பிக் கொண்டு இருந்த வாலண்டைன், காதலி அஸ்டோரியசுக்கு தனது காதல் உணர்வுகளை வாழ்த்து அட்டை மூலம் செய்தி அனுப்பி உள்ளார்.

இதுவே இன்று காதலர் தினத்தன்று ஜோடிகள் தங்களுக்குள் வாழ்த்து அட்டைகளை பகிர்ந்து கொள்ள காரணியாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவை செய்யப்பட்டு, தலை துண்டித்து கொல்லப்பட்டார். அந்த நாள் கி.பி.270, பிப்ரவரி 14ஆம் நாள். அந்த நாளை வாலண்டைன் தினம், காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படித் தான் காதலர் தினத்திற்கு வரலாற்றில் சான்றுகள் கூறப்பட்டு உள்ளன. பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கிய காதலர் தின வாரம் இன்றுடன் முடிவடைகிறது. சாதி, மதம், இனம், பாலினம் என்று எல்லா வேறுபாடுகளை கடந்து மற்றவரை அன்பு செய்ய வேண்டும் என்பதையே, இந்த நாள் உலகுக்கு உணர்த்துகிறது.

அதேநேரம் நமது காதல் குடும்பத்தினரையும் எந்த வகையில் பாதிக்காத வகையில் இருத்தல் வேண்டும் என்பது மிக முக்கியமானது. இந்த காதலர் தின வாழ்த்துகளை உங்களுக்கு விருப்பமான நபர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க : காதலர் தினம்; ஓசூரிலிருந்து ஏற்றுமதியாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட 60% குறைவு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.