ETV Bharat / state

கேரளாவில் தாமரைக்கு இரட்டை ஓட்டு விழுகுதா? தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் விளக்கம் - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 5:57 PM IST

Etv Bharat
Etv Bharat

கேரளா மாநிலத்தில் தேர்தல் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்ற போது பாஜகவுக்கு இரட்டை ஓட்டு விழுந்ததாக எழுந்த புகார் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் தமிழகத்தில் இதுவரை அதுபோன்ற புகார் எதுவும் வரவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கேரளாவில் நடைபெற்ற தேர்தல் மாதிரி வாக்குப் பதிவு (Mock Polls) குறித்தும், பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் இதுவரை அதுபோன்ற ஒரு தகவலோ அல்லது புகாரோ வரவில்லை எனவும், தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளும் சரியாக சென்றுகொண்டு இருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும், நாளை வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்பு, அதாவது காலை 7 மணிக்கு முன்பே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வாக்குப் பதிவுக்கு தயார் படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பாஜகவுக்கு ஆதரவான வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) முறைகேடு நடைபெற அதிகம் வாய்ப்பு இருப்பதாக எதிர்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தொடர்ந்து கூறி வரும் நிலையில், கேரளாவில் நடைபெற்ற மாதிரி வாக்குப் பதிவு (Mock Polls) அதை உறுதி செய்யும் வகையில் அமைந்ததாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சமீபத்திய தகவலாக அந்த செய்து உண்மை தன்மை அற்றது என்ற விளக்கம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு இடையில்தான் நாளை தமிழகத்தில் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: விவிபாட், வாக்குப்பதிவு இயந்திர வழக்கு: "தேர்தல் சுதந்திரமாகவும், நியமாகவும் நடப்பதை உறுதி செய்க" - உச்ச நீதிமன்றம்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.