ETV Bharat / state

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தபால் வாக்குகள் ஏப்.16 ஆம் தேதிக்குள் செலுத்த ஜாக்டோ ஜியோ அறிவிப்பு! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 14, 2024, 8:43 PM IST

Lok Sabha Election 2024: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தபால் வாக்குகளை ஏப்.16ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

Postal Voting
Postal Voting

சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில், ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், தியாகராஜன் ஆகியோர் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து தபால் வாக்கு செலுத்துவதில் உள்ள சுணக்கங்கள் மற்றும் குளறுபடிகள் குறித்துப் பேசினர்.

கடந்த தேர்தல்களைப் போல் அல்லாமல் இந்த தேர்தலில் முதல் முறையாக வரும் ஏப்.16 ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களில் (Facilitation Centre) மட்டுமே பெறவும், செலுத்தவும் முடியும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி தீர்க்கமாகத் தெரிவித்தார். (கடந்த தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளுக்கு முன்னாள் வரை தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என்று இருந்தது)

எனவே, இதுவரை தபால் வாக்குகளைப் பெறாதவர்கள் மற்றும் தபால் வாக்குகளைப் பெற்றுச் செலுத்தாதவர்கள் வரும் ஏப்.16 மாலை 5 மணிக்குள் அந்த பணியினை செய்து முடிக்கவும், அதற்குப் பிறகு தபால் வாக்குகளைப் பெறவும் செலுத்தவும் வாய்ப்பு இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

EDC (Election Duty Certificate) பொறுத்தவரை அதுவும் ஏப்.16 மாலை 5 மணிக்குள் பயிற்சி நடைபெறும் மையங்களில் (Facilitation Centre) பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். எனவே EDC சான்றிதழ்கள் பெறாதவர்களும் ஏப்.16 மாலை 5 மணிக்குள் பெற்றுக் கொள்ளவும். அடுத்த பயிற்சி வகுப்பு 18ஆம் தேதி நடைபெறும்.

அன்றைய தினம் EDC சான்றிதழோ அல்லது தபால் வாக்குகளோ பெறவும், செலுத்தவும் முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், தபால் வாக்குகளைச் செலுத்துவதற்கென்று தனியாக வரும் 16 ஆம் தேதி மதியம் சிறப்பு முகாமை நடத்த வேண்டும் என்ற ஜாக்டோ ஜியோவின் வேண்டுகோளைக் கனிவோடு பரிசீலிப்பதாக உறுதி அளித்து உள்ளார்.

வரும் 16ஆம் தேதி மதியம் தபால் வாக்குகளைச் செலுத்துவதற்கென்றே சிறப்பு முகாம் நடைபெற அதிகம் வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பை தவறாமல் அனைவரும் பயன்படுத்தி தபால் வாக்குகளைச் செலுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். EDC இருப்பவர்கள் ரிசர்வ் பணி வந்தால் அருகாமையில் உள்ள ஏதேனும் வாக்குச்சாவடி மையத்தில் தங்கள் வாக்குகளைச் செலுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

எனவே கடந்த தேர்தல்களைப் போல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 4.6.2024க்கு முன்னர் தங்களது வாக்குகளைச் செலுத்தலாம் என்று மெத்தனமாக இருந்து விட வேண்டாம் என ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸின் அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டார்... லோகேஷ் கனகராஜ் - Benz Tamil Movie

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.