ETV Bharat / state

கேரளாவில் பறவைக் காய்ச்சல்.. புளியரை சோதனைச் சாவடியில் கண்காணிப்புப் பணி தீவிரம்! - Puliyarai check post

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 10:00 PM IST

Bird Flu in Kerala: கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழ்நாடு - கேரள எல்லைகளில் ஒன்றான புளியரை சோதனைச் சாவடியில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

தென்காசி: கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழிப் பண்ணைகளில், அதிக அளவிலான வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அவற்றை ஆய்வு செய்த போது, எச்5 என்1 என்ற பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்புப் பணியினைத் தீவிரப்படுத்த உத்திரவிடப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டம், தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியான புளியரை வாகன சோதனைச் சாவடியில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தற்போது சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்ட பறவையினங்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள், மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோழிகளை கேரளாவில் இறக்கிவிட்டு, மீண்டும் தமிழ்நாடு நோக்கி வரும் வாகனங்கள், முறையான சுத்தமின்றி உள்ளே நுழைந்தால், அந்த வாகனங்களை கேரளாவிற்குத் திருப்பி அனுப்பும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையானது, தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியான புளியரை மற்றும் மேக்கரைப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் எனவும், பறவைக் காய்ச்சல் தமிழ்நாட்டிற்குள் பரவாத வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கால்நடைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல் எதிரொலி; தமிழ்நாட்டு எல்லைகளில் வாகன சோதனை தீவிரம்! - BIRD FLU In Kerala

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.