ETV Bharat / state

"சிறைக்கைதியின் உயிருக்கு சிறைக் காவலர்களே பொறுப்பு" - மாநில மனித உரிமைகள் ஆணையம்! - Human Rights Commission

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 3:16 PM IST

Human Rights Commission: சிறையில் அடைக்கப்படும் கைதிகளின் உயிருக்கு சிறைக் காவலர்கள் தான் பொறுப்பு என மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Human Rights Commission
Human Rights Commission

சென்னை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த வெள்ளையன் என்பவரின் மகன் பாண்டி என்கிற புளி பாண்டி. இவர் தண்டனைக் கைதியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவால் பாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாண்டியின் உடலில் பலத்த ரத்தக் காயங்கள் இருந்ததாகவும், சிறைக் காவலர்களால் அவர் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவரது தந்தை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன், சிறைக் காவலர்கள் தாக்கியதால் தான் பாண்டி உயிரிழந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை, அதே வேளையில், சிறையில் இருக்கும் கைதியின் உயிருக்கு சிறைக் காவலர்கள் பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார்.

சிறைக் காவலர்கள் தங்களது பணியில் கவனக்குறைவாக இருந்ததால் தான் பாண்டி உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள ஆணையம், இதற்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டுமெனவும், இரண்டு வாரங்களில் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ! - Perambalur Father Attack Video

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.