ETV Bharat / state

பம்பரம் சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு.. மதிமுகவின் திட்டம் குறித்து துரை வைகோ கூறியது என்ன? - MDMK SYMBOL issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 12:45 PM IST

Updated : Mar 27, 2024, 4:11 PM IST

MDMK Durai Vaiko: சின்னம் மறுக்கப்பட்டது குறித்து இன்று மதியம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம் எனவும், காலதாமதமானால் எந்த சின்னமாக இருந்தாலும் மக்களிடம் 24 மணி நேரத்தில் கொண்டு போய் சேர்ப்போம் எனவும் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

DURAI VAIKO confidently said to any symbol we will bring to people within 24 hours at trichy
DURAI VAIKO confidently said to any symbol we will bring to people within 24 hours at trichy

துரை வைகோ

திருச்சி: மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி அட்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் வழியாகத் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

இது‌குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோ, "தேர்தல் ஆணையம் தான் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால், இன்று பிற்பகல் நீதிமன்றம் விசாரணை நடைபெற உள்ளது. ஏற்கனவே, மதிமுகவின் சின்னம் பம்பரம் என்பதால் அதனை லாக் செய்து வைத்துள்ளனர். அதில் வேறு யாரும் போட்டியிட முடியாது.

ஆனால் கடந்த காலங்களில் இதுபோன்ற சட்டம் இருந்தாலுமே, தற்போது இது ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது எனவும், ஆகையால் சின்னத்தை ரிலீஸ் செய்து மதிமுகவுக்கு வழங்குவதில் சிக்கல் உள்ளது எனவும் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. தேர்தல் விதிமுறைகள் படி, சட்டத்தில் வாய்ப்பு இருப்பதால் அந்த சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று எங்கள் தரப்பு வக்கீல் கேட்க உள்ளார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கிறோம்.

மக்கள் கடந்த காலங்களைப் போல் இப்போது இல்லை. வேட்பாளரையும், சின்னத்தையும் நன்கு தெரிந்து கொண்டு ஓட்டுப் போடும் அளவிற்குத் தெளிவாக உள்ளனர். தற்போது அனைவரின் கைகளிலும் மொபைல் போன் உள்ளது. எனவே 24 மணி நேரத்தில் அந்த சின்னத்தை மக்களிடம் எங்களால் கொண்டு போய் சேர்க்க முடியும். மதவாத பாஜகவை எதிர்க்கும் அணியாகத் தான் திமுக அணியை மக்கள் பார்க்கின்றனர். எனவே அந்த கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவையும், அதன் சின்னத்தையும் மக்கள் தெரிந்து கொண்டு மக்கள் நிச்சயமாக வாக்கு அளிப்பார்.

நம்பிக்கையுடன் உள்ளோம், இருப்பினும் காலதாமதம் ஆனால் அதற்கு மாற்றுச் சின்னம் வைத்துள்ளோம். அந்த சின்னத்தைத் தேர்ந்தெடுத்துப் போட்டியிடுவோம். ஆனால், தேர்தல் ஆணையம் புதிது புதிதாகக் காரணங்களைச் சொல்லி சின்னம் ஒதுக்குவதில் மெத்தனம் காட்டுகின்றனர். மதிமுக மட்டுமில்லாமல் நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் இதே நிலைதான்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் இல்லை: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்! - Mdmk Pambaram Symbol

Last Updated : Mar 27, 2024, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.