ETV Bharat / state

"பாஜகவிற்கு எந்தவிதத்திலும் தமிழ்நாடு மக்கள் வாழ்வு தரமாட்டார்கள்" - கார்த்திகேய சிவசேனாபதி! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 6:08 PM IST

DMK vs BJP: தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும். ஆனால், பாஜகவிற்கு எந்தவிதத்திலும் தமிழ்நாடு மக்கள் வாழ்வு தரமாட்டார்கள். பாஜக மனிதக்குலத்தின் எதிரி என்று தென்னிந்திய மக்கள் தெளிவாக புரிந்துகொண்டவர்கள் என்று திமுக சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

DMK vs BJP
DMK vs BJP

DMK vs BJP

கோயம்புத்தூர்: கோவை பீளமேடு பகுதியில் திமுக சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "2021க்கு பிறகு முதல்வர் திட்டங்களால், தமிழ்நாடு முழுவதும் மக்கள் அச்சம் இல்லாமலும், போராட்டம் நடத்த வேண்டிய சூழல் இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டிற்கு அரணாக திமுக ஆட்சி இருக்கிறது. பாஜக ஆட்சியில் 10 வருடங்களாகத் தென்னிந்தியா வஞ்சிக்கப்படுகிறது. அண்ணாமலை மற்றும் பாஜகவை பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

வெட் கிரைண்டர் தொழிலுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்தார்கள். தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திரும்பத் தருகிறார்கள். தமிழ்நாடு மீது ஏன் வெறுப்பு? 1974ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கொங்குப் பகுதியைச் சேர்ந்த 24 சமுதாயங்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அருந்ததியர் இன மக்களுக்கு 3 சதவீத உள் கட ஒதுக்கீட்டை திமுக வழங்கியது.

இப்பகுதி இளைஞர்களுக்கு ஆபத்தாக அண்ணாமலை வந்துள்ளார். நான் கோட்டாவில் வந்தவன் அல்ல என அண்ணாமலை சொல்வது பொய். பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ஒதுக்கீட்டில் தான் அண்ணாமலை படித்து, ஐபிஎஸ் அதிகாரியாக வந்தார்.

ஆடு மேய்த்தவரை அதிகாரியாக்கி அழகு பார்த்தது திராவிடம். அதிகாரியை ஆடு மேய்ப்பவராக மாற்றியது ஆரியம். அண்ணாமலை ஏழையான குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை. அண்ணாமலையை வைத்தே தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை அறிந்து கொள்ள முடியும்.

அண்ணாமலை நண்பர்களிடம் இருந்து வாங்கிய பணத்திற்கு வரி காட்டுகிறாரா என வருமான வரித்துறை சோதனை செய்ய வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்து இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

அண்ணாமலை வண்டி டெல்லிக்குப் போகாது. இங்கு தாமரை மலராது. மோடி ஆட்சி முடிவுக்கு வர உள்ளது. தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும். ஆனால், பாஜகவிற்கு எந்தவிதத்திலும் தமிழ்நாடு மக்கள் வாழ்வு தரமாட்டார்கள். பாஜக மனிதக்குலத்தின் எதிரி என்று தென்னிந்திய மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டவர்கள்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களை இழக்க வேண்டி இருக்கும். திராவிட கட்சிகளுக்கு 85 சதவீதம் வாக்குகள் உள்ளது. 15 சதவீதம் திராவிட எதிர்ப்பு வாக்குகள் உள்ளது. திராவிட சித்தாந்தத்திற்கு எப்போதும் ஆபத்து வராது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “கமல்ஹாசன் மூளைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” - அண்ணாமலை காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.