ETV Bharat / state

100 நாள் வேலை திட்டத்தில் ரூ.450 சம்பளம், மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு! - AIADMK Election Manifesto

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 11:48 AM IST

Updated : Mar 22, 2024, 2:11 PM IST

AIADMK Election Manifesto: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.

AIADMK Election Manifesto
AIADMK Election Manifesto

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் சில முக்கிய அம்சங்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டார். அவை பின்வருமாறு:-

  • ஆளுநர் பதவி நியமன முறை தொடர்பாக கருத்து கேட்க வேண்டும்
  • சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும்
  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த வலியுறுத்தல்
  • நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும்
  • குற்றவழக்கு சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தல்
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.450 ஊதியம் வழங்க வலியுறுத்தல்
  • மேகதாட்டு அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்துவோம்
  • உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்
  • முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்
  • பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு
  • காவிரி - குண்டாறு - வைகை இணைப்புத் திட்டம்
  • முல்லைப்பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்
  • மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 ஆக வழங்க வலியுறுத்துவோம்
  • சிறுவாணி அணையை தூர்வாரி சீரமைக்க திட்டம்

என்பன உள்ளிட்ட 54 பக்க தேர்தல் அறிக்கையை அதிமுக வெளியிட்டுள்ளது. இதனை முன்னிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. புதிய முகங்களை களமிறக்கிய ராமதாஸ்! - PMK Candidate List

Last Updated :Mar 22, 2024, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.