ETV Bharat / state

பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. புதிய முகங்களை களமிறக்கிய ராமதாஸ்! - PMK candidate List

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 10:16 AM IST

Updated : Mar 22, 2024, 10:41 AM IST

PMK candidate List: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வ.எண்தொகுதிகள்வேட்பாளர்கள்வகிக்கும் பொறுப்புகள்
1. திண்டுக்கல் கவிஞர் திலகபாமா பி.காம்.,மாநிலப் பொருளாளர், பா.ம.க
2. அரக்கோணம் வழக்கறிஞர் கே.பாலு பி.காம்., பி.எல்.,செய்தித் தொடர்பாளர், பா.ம.க.
3. ஆரணி கணேஷ்குமார் பி.இ., பி.எச்டி.,முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்
4. கடலூர் இயக்குநர் தங்கர் பச்சான் டி.எஃப்.டெக்.,எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்
5. மயிலாடுதுறை ம.க.ஸ்டாலின் பி.எஸ்சி.,மாவட்டச் செயலாளர், பா.ம.க. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
6. கள்ளக்குறிச்சி தேவதாஸ் உடையார் பி.ஏ., பி.எல்.,முன்னாள் எம்பி., மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க.
7. தருமபுரி அரசாங்கம் பி.காம்.,மாவட்டச் செயலாளர், பா.ம.க. தருமபுரி கிழக்கு மாவட்டம்
8. சேலம் அண்ணாதுரை பி.ஏ.,பி.எல்.,முன்னாள் மாவட்டச் செயலாளர், பா.ம.க. சேலம் தெற்கு மாவட்டம்
9. விழுப்புரம் முரளி சங்கர் பி.காம்.,மாநில செயலாளர், பா.ம.க. மாணவர் அணி

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக தலைவர் ராமதாஸ், அவரது மனைவி செளமியா அன்புமணி, கட்சியின் மூத்த தலைவர்களான ஏ.கே.மூர்த்தி, வடிவேல் ராவணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தேர்தலில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடலூர் தொகுதியில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், தருமபுரி தொகுதியில் அரசாங்கம், மயிலாடுதுறை தொகுதியில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், சேலத்தில் அண்ணாதுரை உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம்(தனி) தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாஜகவுடன் இணைந்த பாமக.. கள நிலவரத்தை அன்றே கணித்த ஈடிவி பாரத்!

Last Updated :Mar 22, 2024, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.