ETV Bharat / sports

தமிழ்நாடு - கர்நாடக அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்! பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் - டிஎன்சிஏ!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 11:01 PM IST

ranji trophy: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு அணி - கர்நாடக அணிகள் மோதும் போட்டியை இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம்
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம்

சென்னை: இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பிரசித்தி பெற்றது ரஞ்சி கோப்பை கிரிக்கெட். திறமையான கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கான இந்த போட்டி மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. தற்போது 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

இதில் தமிழ்நாடு, கேரளா, கோவா, கர்நாடகா, மாகராஷ்டிரா உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் குருப் A,B,C,D என 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி - கர்நாடக அணியை நாளை மறுநாள் (பிப். 9) எதிர்கொள்கிறது.

இதுவரை இவ்விரு அணிகளும் விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3ல் வெற்றி 2ல் தோல்வி கண்டு குருப் சி பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. ரன் ரேட் அடிப்படையில் தமிழ்நாடு அணி முதல் இடத்தில் உள்ளது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் பிப். 9ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது.

இதில் உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக கேப்டன் மயங்க் அகர்வால் மீண்டும் களமிறங்கவுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு, கர்நாடக அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை போட்டியை ரசிகர் இலவசமாக அமர்ந்து பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளதாவது "சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தமிழ்நாடு, கர்நாடக டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்.

மேலும் போட்டியை நேரில் கான வரும் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள C, D, E ஸ்டாண்ட் இருக்கைகளில் அமர்ந்து இலவசமாகப் போட்டியைக் காணலாம் என தெரிவித்துள்ளது. மேலும் விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் உள்ள 4வது நுழைவாயில் வழியாகப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளில் உத்தேச பட்டியல்: தமிழ்நாடு அணி: சாய் கிஷோர் (கேப்டன்), பாபா இந்திரஜித், பாலசுப்ரமணியம் சச்சின், சாய் சுதர்சன் , விமல் குமார், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், நாராயண் ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன் பால், சுரேஷ் லோகேஷ்வர், த்ரிலோக் நாக், குல்தீப் சென், முகமது, அஜித் ராம், சந்தீப் வாரியர், நடராஜன்.

கர்நாடக அணி: மயங்க் அகர்வால் (கேப்டன்), நிகின் ஜோஸ் , தேவ்தத் படிக்கல், சமர்த் ஆர், மணீஷ் பாண்டே, ஷரத் ஸ்ரீனிவாஸ், அனீஷ் கே.வி., வைஷாக் விஜயகுமார், வாசுகி கவுசிக், சஷிகுமார் கே, சுஜய் சதேரி, வித்வத் கவரப்பா, வெங்கடேஷ் எம், கிஷன் எஸ் பெதரே, ரோஹித் குமார் ஏசி, ஹர்திக் ராஜ்.

இதையும் படிங்க: "பாவம் அவரே கன்பியூசன் ஆகிட்டாரு.." டிஆர்எஸ் முடிவில் குழம்பிய நடுவர் - வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.