ETV Bharat / sports

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட்; நியூசிலாந்துக்கு 227 ரன்கள் தேவை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 1:58 PM IST

RSA Vs NZ: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரின் மூன்றாவது நாள் முடிவில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்களை குவித்துள்ளது. தொடரை வெல்ல நியூசிலாந்து அணிக்கு 227 ரன்கள் தேவைப்படுகிறது.

New Zealand vs South Africa 2nd Test match
தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்த்

ஹாமில்டன் (நியூசிலாந்து): தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த பிப்.13ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் தென்னாப்பிரிக்கா அணி 242 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி 211 ரன்களைப் பெற்று, 31 ரன்கள் பின்னடவைச் சந்தித்தது. இந்நிலையில், 3வது நாளான இன்று (பிப்.15) தென்னாப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

அதில், தொடக்க வீரர்களாக நீல் பிராண்ட்-ஃபொர்ட்டின் ஜோடி களமிறங்கியது. 10 ஓவர் முடிவிற்கு 23-0 என்ற கணக்கில் விளையாடியது. ஃபொர்ட்டின் எல்பிடப்ள்யூ ஆகி சொற்ப ரன்னில் வெளியேறினார். பின்னர், வோன் டோன்னர் களமிறங்க, வந்த வேகத்தில் சொற்ப ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் சென்றார். பின் சுபைர் ஹம்சா களம் கண்டார்.

16வது ஓவரில் நீல் பிராண்ட் வில்லியம் வீசிய பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். 16 ஓவர் முடிவிற்கு 37-2 என்ற கணக்கில் விளையாடியது. 18வது ஓவரில் நீல் பிராண்ட் அவுட் ஆக, டேவிட் பெடிங்காம் களம் கண்டார். 20 ஓவர் முடிவிற்கு தென்னாப்பிரிக்கா அணி 46-3 என்ற கணக்கில் விளையாடியது.

24வது ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியை விட 100 ரன்கள் முன்னிலை வகித்தது. அடுத்த 8 ஓவர்களுக்கு அணிக்கு சொற்ப ரன்கள் மட்டுமே கிடைத்தது. 37வது ஓவரில் சுபைர் ஹம்சா அவுட் ஆக, கீகன் பீட்டர்சன் களம் கண்டார். 39வது ஓவரில் டேவிட் பெடிங்காம் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

46 ஓவர் முடிவிற்கு 148-4 என்ற கணக்கில் விளையாடியது. 55 ஓவர் முடிவிற்கு 193-4 என்ற கணக்கில் விளையாடியது. 58வது ஓவரில் கீகன் பீட்டர்சன் விளாசிய பவுண்டரியில் தென்னாப்பிரிக்கா அணி 200 ரன்களை குவித்தது. அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கீகன் பீட்டர்சன் அவுட் ஆனார்.

6 பவுண்டரிகள் வீதம் 43 ரன்களை அவர் குவித்தார். 62வது ஓவரில் பெடிங்காம் தனது சதத்தை பதிவு செய்தார். பின்னர், ரூவான் டி ஸ்குவாரட், களமிறங்கிய வேகத்தில் போல்ட் ஆனார். பின் வோன் பெர்க் களமிறங்கினார். இதனையடுத்து பெடிங்காம் தனது விக்கெட்டை இழந்தார். 141 பந்துகளுக்கு 110 ரன்கள் அவர் எடுத்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். அதன்படி, தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்களை குவித்தது.

இந்த போட்டியில், வில்லியம் ஒ ரோக்கி 5 விக்கெட்டுகளையும், பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும், மாட் ஹென்றி, வாக்னர், ரச்சின் ரவீந்திரா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இந்நிலையில், நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக டாம் லாதம் - கான்வே ஜோடி விளையாடியது. 2வது ஓவரில் கான்வே தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். 5 ஓவர் முடிவிற்கு 12-0 என்ற கணக்கில் விளையாடியது. 9வது ஓவரில் லாதம் தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார்.

10 ஓவர் முடிவிற்கு நியூசிலாந்து அணி 32-0 என்ற கணக்கில் விளையாடியது. 14 ஓவரில் கான்வே டி பெடிட் வீசிய பந்தை சமாளிக்க முடியாமல் எல்பிடபிள்யூ ஆனார். அதன்படி, மூன்றாவது நாள் போட்டி முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்களை குவித்தது. களத்தில் டாம் லாதம் உள்ளார். மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணிக்கு தொடரை வெல்ல 227 ரன்கள் தேவைப்படுகிறது.

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; இந்திய அணி பேட்டிங் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.