ETV Bharat / sports

CSK Vs DC: டாஸ் வென்று டெல்லி பேட்டிங் தேர்வு! சென்னையின் வெற்றி வேட்கை தொடருமா? - IPL 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 7:20 PM IST

IPL 2024 CSK vs DC: சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

விசாகப்பட்டினம்: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச்.31) இரவு 7.30 மணிக்கு விசாகபட்டினத்தில் நடைபெறும் 13வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

நடப்பு ஐபிஎல் சீசனில் தோல்வியே தழுவாத சென்னை அணி தொடக்கம் முதலே வெற்றி வாகை சூடி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேநேரம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி விளையாடிய இரண்டு ஆட்டத்திலும் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. நடப்பு சீசனில் டெல்லி அணி முதல் வெற்றியை ருசிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதேநேரம் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று சென்னை அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்:

சென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, முஸ்தபிசுர் ரஹ்மான்.

டெல்லி கேபிட்டல்ஸ் : ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

இதையும் படிங்க : GT Vs SRH: குஜராத் அசத்தல் வெற்றி! மில்லர், சாய் சுதர்சன் அபாரம்! ஐதராபாத்துக்கு திடீர் சறுக்கல்! - IPL GT Vs SRH Result

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.