ETV Bharat / sports

U19 உலகக் கோப்பை: இந்தியாவின் வெற்றிக்கு 254 ரன்கள் இலக்கு! 6-வது முறை கோப்பை வெல்லுமா இந்தியா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 7:14 PM IST

IND Vs AUS U19: U-19 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 254 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி.

IND Vs AUS U19
IND Vs AUS U19

பெனானி: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்டன.

கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதி போட்டியில் இந்திய அணி- ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி டிக்சன்- சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர்.

இதில் 8 பந்துகளை எதிர்கொண்ட சாம் கான்ஸ்டாஸ், ராஜ் லிம்பானி வீசிய பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனைக் களமிறங்கிய கேப்டன் ஹக் வெய்ப்ஜென் - டிக்சனுடன் ஜோடி அணியின் ஸ்கோரை சேர்ந்து நிதானமாக உயர்த்தினர்.

50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை நமன் திவாரி பிரித்தார். இதில் கேப்டன் ஹக் வெய்ப்ஜென் 48 ரன்னில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். மறுமுறையில் நிதமான விளையாடி வந்த டிக்சன், 42 ரன்களில் வெளியேறினார்.

இதன் காரணமாக 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த்து ஆஸ்திரேலியா அணி. இதனையடுத்து களமிறங்கிய ஹர்ஜாஸ் சிங் 55 ரன்கள்,ஆலிவர் பீக் 44 ரன்கள் சேர்க்க அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது இந்திய அணி.19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை 5 முறை வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இந்த முறையும் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

இதையும் படிங்க: "பாவம் அவரே கன்பியூசன் ஆகிட்டாரு.." டிஆர்எஸ் முடிவில் குழம்பிய நடுவர் - வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.