ETV Bharat / spiritual

Weekly Rasipalan: காதல் துணையுடன் ரொமாண்டிக் டின்னர்? அதிர்ஷ்டக்கார ராசி இதுதான்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 7:17 AM IST

Updated : Mar 3, 2024, 7:33 AM IST

Weekly Rasipalan in Tamil: மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரையிலான 12 ராசிகளின் வார ராசி பலன்களைக் காணலாம்.

Weekly Rasipalan
வார ராசிபலன்கள்

மேஷம்: இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்வதைக் காணலாம். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால், ஏதோ ஒரு சில காரணங்களால் இருவருக்கும் இடையே சச்சரவுகள் ஏற்படக்கூடும். பூர்வீக சொத்துக்கள் மூலம் உங்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம்.

அனைத்து செலவுகளையும், சரியாக நிர்வாகிக்க இன்று நீங்கள் ஒரு பட்ஜெட்டை உருவாக்குவீர்கள். மாணவர்களின் உயர்கல்விக்கு உகந்த நேரம். அதிர்ஷ்டக்காற்று உங்கள் பக்கம் வீசும். பிள்ளைகளுடன் சிறிது நேரம் செலவிடுவீர்கள். புதிய வீடு, மனை போன்ற சொத்துக்களில் முதலீடு செய்யலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கு கூடுதல் லாபத்தைத் தரும். ஆரோக்கியத்தை மேம்படுத்த, அன்றாட பழக்கவழக்கத்தில் காலை நடைப்பயிற்சி, யோகா மற்றும் தியானம் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.

ரிஷபம்: மிகவும் நன்றான வாரம் இது. காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில சச்சரவுகள் ஏற்படலாம். ஆனால் உங்களின் புத்திசாலித்தனத்தால் அதை சரி செய்வீர்கள். வீடு, மனை போன்ற சொத்துக்களில் முதலீடு செய்ய விரும்பினால், இது அதற்கான உகந்த நேரம். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். மாணவர்களின் உயர் கல்விக்கு சரியான நேரம். வேலைக்கு செல்பவர்கள், அவர்களின் பழைய பணியிடத்திலேயே தொடர்ந்து வேலையில் இருப்பது நல்லது.

வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். உடல்நலத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், நீங்கள் உடனடியாக ஒரு நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது. செலவுகள் அதிகமாக இருக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள் மற்றும் அதற்காகவும் செலவு செய்வீர்கள். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ஒரு புனித ஸ்தலத்திற்கு யாத்திரை செல்ல திட்டமிடுவீர்கள்.

மிதுனம்: இந்த வாரம் மிக நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், முழுமையாகவும் அனுபவிப்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் எங்காவது சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்கள். மன அமைதிக்காக சில மத நிகழ்ச்சிகளிலும் சற்று நேரம் செலவிடுவீர்கள். உங்கள் சகோதரரின் திருமணத்தில் உள்ள தடைகள் ஒரு தூரத்து உறவினரின் உதவியுடன் நீக்கப்படலாம். வீட்டில் மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் அனைவரும் கடினமாக உழைப்பதைக் காண்பீர்கள்.

பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் முன்பை விட நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில், வியாபாரத்தில் உங்கள் திட்டங்களை மீண்டும் துவங்கி செயலாற்றி, அதில் வெற்றியும் அடைவீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். காதல் துணைக்கு ஒரு பரிசைக் கொடுக்கலாம் அல்லது ஒரு ரொமாண்டிக் டின்னருக்குக் கூட செல்லலாம்.

கடகம்: உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான வாரம் இது. குடும்பத்தில் சந்தோஷமும், சமாதானமும் நிலவும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வீர்கள். காதல் உறவில் வாழ்பவர்கள், தங்கள் காதல் துணையை சந்தித்து காதலை வெளிப்படுத்தக் கூடும். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவீர்கள். உயர்கல்வி கற்பதற்கான நேரம் நன்றாக உள்ளது. நீங்கள் ஏதாவது ஒரு போட்டியில் பங்கேற்கிறீர்கள் என்றால், மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.

பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உத்தியோக மாற்றம் குறித்து சற்று குழப்பம் ஏற்படலாம். நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில், உங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க, காலை நடைப்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை அன்றாட பழக்க வழக்கத்தில் கொண்டு வாருங்கள். சொத்துக்கள் மூலம் பணவரவு கிடைக்கும். பணத்தை வேறு எதிலாவது முதலீடு செய்தால், அது எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரலாம்.

சிம்மம்: திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். காதல் உறவில் வாழ்பவர்களுக்கு, அவர்களின் காதல் துணையின் ஆதரவு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல ரிலேஷன்ஷிப் அமையலாம். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். ஆனால், உங்கள் நேரத்தை வீணடிக்கும் நண்பர்களிடமிருந்து நீங்கள் சற்று விலகியே இருக்க வேண்டும். வேலை செய்பவர்கள் புதிய வேலையின் பின்னால் செல்லாமல், பழைய வேலையிலேயே தொடர்ந்து இருப்பது நல்லது.

இதில் நீங்கள் முன்னேறுவதற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர் எனில், வியாபாரத்தில் பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்திற்காக சில மாற்றங்களைச் செய்தால், அதில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். நிலத்தில் முதலீடு செய்யலாம். நீங்கள் ஒரு புதிய வாகனத்தை வாங்க விரும்பினால், அதை வாங்கலாம். ஆனால், உங்கள் செலவுகளை மனதில் வைத்து அனைத்து செயல்களையும் செய்தால், அது நன்மை அளிக்கும்.

கன்னி: இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். அதே நேரத்தில், செலவுகளும் அதிகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு ரொமாண்டிக் டின்னருக்கு செல்வீர்கள். திருமணமாகாதவர்கள், அவர்களுடைய மனதைக் கவர்ந்த வாழ்க்கைத் துணையைக் கண்டறிவார்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

வீட்டை அலங்கரிக்க ஒரு சில பொருட்களை ஷாப்பிங் செய்வீர்கள். சில நல்ல மனிதர்களின் உதவியினால், வியாபாரம் செய்பவர்கள் அவர்களின் வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவார்கள். கல்வியில் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மிகவும் கவனமாக செய்வார்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் ஏதாவது ஒரு புண்ணிய ஸ்தலத்திற்கு செல்ல திட்டமிடுவீர்கள். அங்கு அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வீடு, மனை ஆகிய சொத்துக்களில் முதலீடு செய்யலாம்.

துலாம்: இந்த வாரத்தில் எந்த ஒரு விசேஷமும் இருக்காது. குடும்பத்தில் ஏதோ ஒரு வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் சில விஷயங்களில் வாக்குவாதம் ஏற்படலாம். பேசுகின்ற கடுமையான வார்த்தைகளினால், உங்கள் காதல் வாழ்க்கையிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, பழக்கவழக்கத்தை சற்று மாற்ற வேண்டும். மாணவர்களின் உயர்கல்விக்கு உகந்த நேரம் இது.

அவர்கள் வெளிநாடு சென்று கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கலாம். நிதிநிலை நன்றாக இருக்கும். வாங்கிய கடனை வெற்றிகரமாக திருப்பித் தருவீர்கள். நண்பர்கள் மூலம் வருமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர் எனில், வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். இந்த வாரம் நிலத்தில் முதலீடு செய்யலாம். ஒரு வீடு அல்லது மனை வாங்க திட்டமிட்டால், அதையும் நீங்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: நீண்ட காலமாக செய்ய விரும்பிய வேலைகளை இந்த வாரம் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் எங்காவது ஒரு சுற்றுலா பயணம் செய்ய திட்டமிடுவீர்கள். இதனால், அதிக செலவாவதற்கான வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். திருமணம் ஆகாதவர்களுக்கு ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் அமையக்கூடும். வீட்டில் பூஜை மற்றும் பஜனைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

மேல் அதிகாரிகளிடம் பேசும் போது இனிமையாகப் பேசவும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். குடும்ப வாழ்க்கையில் சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். வருமானம் தொடர்ந்து அதிகரிக்கும் மற்றும் உங்கள் செலவுகளும் கணிசமாக இருக்கும். உங்கள் குடும்பத்தினருக்காகவும் கொஞ்சம் ஷாப்பிங் செய்வீர்கள். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவீர்கள். மாணவர்களின் உயர் கல்விக்கு உகந்த நேரம் இது. கல்வி கற்பதற்காக ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு செல்லக்கூடும்.

தனுசு: நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் இருந்த சில முக்கியமான வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில அன்பான தருணங்களை செலவிடுவீர்கள். மேலும், ஒரு சில புதிய வேலைகளையும் தொடங்குவீர்கள். அதில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு நிச்சியமாக, முழுமையாக ஆதரவளிப்பார். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் முன்பைவிட மேம்படும். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, மேல் அதிகாரிகளிடம் இருந்து நல்ல செய்திவரும். நிலத்தில் முதலீடு செய்யலாம். இதற்கு முன்பு ஏதேனும் முதலீடு செய்திருந்தால், அதிலிருந்தும் முழு பலனைப் பெறுவீர்கள். ஒரு புதிய வாகனத்தை வாங்கலாம். சகோதர, சகோதரிகளின் கல்விக்காக பணத்தை முதலீடு செய்வீர்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் பணிகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் அம்மா உங்களுடன் சிறிது காலம் தங்கிச் செல்வார்.

மகரம்: இந்த வாரம் உங்கள் உறவுகளை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். வெளியாட்களின் தலையீடு காரணமாக கருத்து வேறுபாடு ஏற்படலாம். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். எங்காவது சுற்றுலா செல்ல திட்டமிடுங்கள். பொருளாதார நிலை மேம்படும். தினசரி வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வி கற்க சில சிரமங்களை சந்திக்க நேரிடும். அவர்களின் உயர்கல்விக்கு உகந்த நேரம். சகோதரரின் திருமண முயற்சிகளில் வந்த தடைகள் நீங்கும்.

வீட்டில் மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். எல்லோரும் ஒன்றாக ஷாப்பிங் செல்வீர்கள். வீட்டில் பிறந்த புதிய குழந்தையின் வரவால், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். இன்று நண்பர்களும் பண உதவி செய்வீர்கள். முதலீடு செய்ய ஒரு நல்ல ஆலோசகரின் உதவியைப் பெறுங்கள். ஆரோக்கியம் மேம்படும். புதிய வேலைவாய்ப்பும் வரும். வியாபாரம் செய்பவர் எனில், வியாபாரத்தை மேம்படுத்த உங்கள் சகோதரர் உதவுவார்.

கும்பம்: இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் குடும்பத்துடன் சிறிது நேரம் செலவழித்து, பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பதைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். இது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆசிரியர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றியை அடைய முடியும். நேரத்தை வீணடிக்கும் நண்பர்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும். பொருளாதார நிலைமை மேலும் வலுப்பெறும். புது வீடு, புதிய வண்டி போன்றவற்றை வாங்கலாம்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் தொழில் புரிவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்வீர்கள். இதற்கு முன்பு ஏதேனும் முதலீடு செய்திருந்தால், அதிலிருந்தும் முழு பலனைப் பெறுவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு வரன்கள் பார்பதற்கான பேச்சுவார்த்தை நிகழும்.

மீனம்: மிகவும் ஆற்றல் நிறைந்த வாரம் இது. இதன் காரணமாக, நிலுவையில் வைத்துள்ள அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். உங்கள் உணர்வுகளை, உங்கள் காதல் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள் மற்றும் ஒன்றாக இணைந்து சிறிது நேரம் செலவழிப்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட மனக் கசப்புகள் தீரும். பொருளாதார நிலை மேம்படும். அலுவலகத்தில் உங்கள் சீனியர் அதிகாரிகள், உங்கள் வேலையின் திறமையைப் பாராட்டுவார்கள். வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், அதிலும் வெற்றி பெறுவீர்கள்.

வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியம் முன்பை விட மேம்படும். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவீர்கள். அரசாங்க ஆய்வறிக்கை தயார் செய்வதற்காக மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உயர்கல்விக்கு உகந்த நேரம். பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம். வீட்டை அலங்கரிக்க நீங்கள் கொஞ்சம் ஷாப்பிங் செய்வீர்கள்.

Last Updated : Mar 3, 2024, 7:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.