ETV Bharat / spiritual

எதிர் பாலினத்தவரின் கவனத்தை ஈர்க்கும் நாள் இது..! எந்த ராசிக்காரருக்கு தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 6:47 AM IST

Today Rasi Palan: மார்ச் 15ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

Today Rasi Palan in tamil
Today Rasi Palan in tamil

மேஷம்: இன்றைய தினம் நீங்கள் அனைத்து வகையிலும் முழுமையான சுதந்திரத்தை விரும்புபவராக இருப்பீர்கள். இளைஞர்கள் பொழுதுபோக்குகளில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் விருப்பப்படும் பொருள்களை வாங்கி தருமாறு உங்களை கேட்கலாம். பொதுவாக, குடும்ப விவகாரங்கள் இன்று ஆதிக்கம் செலுத்துகின்றன.

ரிஷபம்: இன்று நீங்கள் மிகவும் சுயநலத்துடன் நடந்து கொள்ளும் வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற உணர்வை கொடுக்கக் கூடும். மற்றவர்களை கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் போக்கு உங்களிடம் காணப்படும். இதனால், முக்கிய உறவுகள் பாதிக்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் சந்திக்கும் அனைவரின் தேவைகளையும், உணர்ச்சிகளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மிதுனம்: உங்கள் சமூக வட்டத்தில் ஒரு தலைவராக நீங்கள் நற்பெயரைப் பெறுவீர்கள். ஏதோவொரு விஷயத்திற்காக உங்கள் மனம் ஏங்குகிறது. அதை அடைவதற்குள் உங்கள் திறனை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய கற்பனைத்திறன் மூலம் இன்று சில தீர்வுகள் கிடைக்கக் கூடும். உங்கள் மனதை குடைந்து வரும் சில கேள்விகளுக்கு, இன்று பதில் கிடைக்கலாம்.

கடகம்: கடவுளின் ஆசியுடன், நீங்கள் நினைக்கும் அல்லது செயல்படுத்தும் காரியம் வெற்றி பெறும். மாணவர்கள் சிறப்பாக செயல்புரிந்து பணியை நிறைவேற்றுவார்கள். நீங்கள், உங்கள் கற்பனைத் திறனை சிறப்பாக வெளிக்காட்டுவீர்கள். சுருக்கமாக, மகிழ்ச்சியை பலவகையில் கொடுக்கும் ஒரு நாளாக இருக்கும்.

சிம்மம்: இன்று, நீங்கள் உங்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தை காண்பதற்காக கடுமையாக உழைப்பீர்கள். தீர்வுகளைக் காண்பதில் நீங்கள் மிக வேகமாக செயல்படுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலைபுரிபவர்கள் மந்தமாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். உங்களது அச்ச உணர்வுகள் உங்கள் வாழ்க்கையின் சந்தோஷத்தை பாதிக்க நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். பணியில் உங்கள் மூத்தவர்கள் உங்கள் பணியில் திருப்தி அடைவார்கள்.

கன்னி: உங்கள் வர்த்தக திறமைகளை சோதிக்கும் வகையிலான அனைத்து சவால்களையும் நம்பிக்கையுடன் சந்திக்கலாம். குறிப்பாக, முதலீடுகள் மற்றும் நிதி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகளை தீர்க்க, உங்களுக்கு புதுமையான வழிகள் தோன்றும்.

துலாம்: லைட், கேமிரா, ஆக்‌ஷன் என்று ஊக்கம் மற்றும் புத்துணர்வு கொடுக்கும் நாளான இன்று, உங்களுக்கு பெரும் புகழை சேர்க்கும் என்பதால், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கவும். புதுமையான திட்டங்கள், குறிப்பாக சுயநிதி தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி மற்றும் விருப்பம் நிறைவேறும் என்பதால் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.

விருச்சிகம்: உங்களை நீங்களே ஆராய்ந்து கொண்டு, நன்றாக சிந்திக்கவும். கர்மவினைகளை எவரும் தவிர்க்க முடியாது. பலன்களை நினைத்து அதிகம் சிந்திக்க வேண்டாம். கூட்டு முயற்சி தொடர்பான விஷயங்களில், பொறுமையைக் கடைப்பிடித்து கவனமாக கண்காணிக்கவும்.

தனுசு: இன்று, பிரச்னையினால் நீங்கள் அதிகம் பாதிக்கப்படுவீர்கள். ஆனால், அதனை எவ்வளவு விரைவாக தீர்க்க முடியுமா? அவ்வளவு விரைவாக தீர்க்க முயற்சி எடுக்கவும். நாளின் இறுதியில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மகரம்: இன்று நீங்கள் உற்சாகத்துடன் தொடக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். பணியிடத்தில் அதிக செயல்திறனுடன் பணியாற்றும் வகையில், வேலை செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வருவீர்கள். இந்த மாற்றம் உங்களது தன்னம்பிக்கையை அதிகரித்து நல்ல பலன் கிடைக்கும்.

கும்பம்: ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் செயல்படும் உங்கள் சக பணியாளர்கள், பணியில் உங்கள் செயல்திறனை அதிகரிக்க உதவுவார்கள். மேலும், உங்கள் படைப்பாற்றல் உங்களுக்கு புகழைச் சேர்க்கும். உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் நீங்கள் நல்லவகையில் நேரத்தை செலவழித்து இந்த நாளை நிறைவு செய்வீர்கள்.

மீனம்: இன்று நீங்கள் எதிர் பாலினத்தவரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். இது எதிர்காலத்தில் உங்கள் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும். கிரகங்கள் சாதகமாக உள்ளதன் காரணமாக, நீங்கள் உங்கள் எதிர்பார்ப்பை விட அதிகம் பெறுவீர்கள். நீங்கள் எச்சரிக்கையாக செயல்படும் ஒரு நபராக இருந்த போதிலும், நீங்கள் கோப உணர்வு கொண்டவராகவும், சவால்களை சந்திக்க தயங்காதவராகவும் இருப்பீர்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.