மேஷம்: உங்களை எதிர்கொண்டிருக்கும் பிரச்னைகளை சமாளிக்க, இன்று சிறந்த முறையில் தயாராக உள்ளீர்கள். உங்களுடைய உற்சாகத்தை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது பலவற்றை திட்டமிடுவதைக் காட்டிலும், செய்வதற்கான ஒரு நேரம். இன்று உங்களால் மலைகளைத் தூக்கவும், சமுத்திரத்தைக் கடக்கவும் கூட முடியும். நாளின் பிற்பாதியில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவீர்கள்.
ரிஷபம்: சக்தி, களிப்பு, உற்சாகம் ஆகிய மூன்று உணர்ச்சிகள் இன்று உங்கள் மனநிலையில் இருக்கும். எனவே, உங்கள் அன்புக்குரியவர்களும், அருகாமையில் உள்ளவர்களும் அதனால் இன்புறுவார்கள். நற்பலன்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் களைப்பாக உணர்ந்தால், வேலையிலிருந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு ஓய்வெடுக்கவும்.
மிதுனம்: உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் சில உயர்வுகளையும், தாழ்வுகளையும் சந்திப்பீர்கள். மாலையில் கவனமும், அக்கறையும் கட்டாயம் தேவை. பணம் தொடர்பான விஷயத்தில், இடர்களை ஏற்று செயல்படக்கூடும். சிந்தனையை அதிகம் செலுத்தாமல், உங்கள் நம்பிக்கையைக் காத்து அகமகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும்.
கடகம்: உங்கள் செயல்பாடுகளை உள்ளத்தூண்டுதல் ஆக்கிரமிக்கும். நாளின் பிற்பகுதியில், எதிர்மறை விஷயங்களை புறந்தள்ளி, நேர்மறை விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தவும். உங்கள் சிந்தனையைக் காட்டிலும், செயல்பாடே நல்விளைவை ஏற்படுத்தும். மெல்லிசையில் உங்கள் இதயத்தையும், புத்தியையும் லயிக்கச் செய்யுங்கள்.
சிம்மம்: உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டியிருக்கும். கடின முயற்சிகளுக்கு உரிய வெகுமதி கிடைக்கும். அனைத்து சுபமான பணிகளையும், புதிய திட்டங்களையும் மதியத்தில் தொடங்கவும். உங்கள் தாராள குணமும், உதவும் தன்மையும் இன்று உங்களை அமைதியாக வைத்திருக்கும்.
கன்னி: அலுவலகத்தில் தலைமையேற்கும் வாய்ப்பும், ஒரு திட்டத்தை முன்மொழியும் வாய்ப்பும் இன்று கிடைப்பதற்கான அறிகுறி தெரிகிறது. மதிய நேரம், ஷாப்பிங் மற்றும் அன்புக்கு உரியவர்களுக்கு பரிசு வாங்குவது என முடியும். மேலும், நெருங்கிய நண்பர் அல்லது குடும்பத்தினருடன் நீண்டகால இலக்குகளை திட்டமிடுவதில் உங்கள் மாலைப்பொழுது கழியும்.
துலாம்: இன்றைய நாள் குடும்பம் தொடர்பானதாக இருக்கும். பெரிய குடும்பம் என்றால், நன்மையும் பெரியதாக இருக்கும். உங்களுடைய நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்கள் உங்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தக்கூடும்.
விருச்சிகம்: உங்களது ஒருங்கிணைப்பு திறனை இன்று நன்கு வெளிப்படுத்துவீர்கள். பணியிடத்தில் உங்கள் வேலை மீது உங்களுக்கு தனிச்சிறப்பான ஒரு விருப்பம் ஏற்படும். நாளின் பிற்பகுதியில், நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு நல்ல தீர்வுகளைக் காண்பீர்கள். உங்கள் எதிர்காலம் குறித்து தெளிவான தீர்மானங்களை எடுக்க, நீங்கள் எடுக்கும் எந்த முடிவுகள் குறித்தும் நன்கு ஆராய வேண்டியது அவசியம்.
தனுசு: உங்கள் எதிரிகளையும், போட்டியாளர்களையும் கண்டு கவலைப்பட வேண்டாம். கடும் போட்டியில் கூட வெற்றி பெறும் திறமை உங்களுக்கு உள்ளதால், நீங்கள் கொண்டாடுவதற்கான அற்புதமான வாய்ப்பு இது. மாலையில் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள்.
மகரம்: இன்று புதிதாக ஏதேனும் செய்ய திட்டமிட்டிருந்தால், அதை தள்ளிப்போடுங்கள். அவ்வாறு செய்வது நன்மை தருவதாக இருக்கும். நீங்கள் திட்டப்படி நடப்பதில் உறுதியாக இருந்தீர்களேயானால், விளைவு நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நன்மை அளிப்பதாக இல்லாமல் போகக்கூடும். இதனால், எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும்.
கும்பம்: உங்கள் ஆசைகள், உங்களை அடக்கியாள்பவராக ஆக்கும். இன்று பேசக்கூடாததைப் பேசுவதற்கு வாய்ப்பு அதிகம். அதீத வற்புறுத்தலை நீங்கள் செய்தால், நாளை கவலைப்படுவதற்கு வாயப்புகள் அதிகம். அதீதமான முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்.
மீனம்: உங்களுக்கு விருப்பமானவர்களுடன் இன்றைய பொழுதைக் கழிப்பதற்கு ஆயத்தமாவீர்கள். உணர்ச்சிவசப்பட்டு எதை செய்தாலும், செய்யவில்லை என்றாலும், உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக உங்களது வசதியையும், சௌகரியத்தையும் விட்டுக் கொடுப்பீர்கள்.