ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: உலகையே கைப்பற்ற எண்ணினாலும் இன்று கைக்கூடும்..! எந்த ராசிக்காரருக்கு தெரியுமா? - TODAY RASIPALAN

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 6:44 AM IST

Today Rasipalan: ஏப்ரல் 6ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைக் காணலாம்.

Today Rasi palan in Tamil
Today Rasi palan in Tamil

மேஷம்: புரிந்துகொள்ள முடியாத அற்புதமான சம்பவங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அது எதிர்பாராத சம்பவமாக இருந்தாலும் நன்மை பயப்பதாகவே இருக்கக்கூடும். அந்த சம்பவம் நிலைமையை அடியோடு மாற்றிவிடாது என்றாலும், ஒரு சில விஷயங்களை மதிப்பீடு செய்ய உதவியாக இருக்கும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் வேலையை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

ரிஷபம்: நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஏமாற்றம் மற்றும் எரிச்சலின் காரணமாக, பல விஷயங்களில் தேவையில்லாத உரிமை உணர்வுடன் நடந்து கொள்ள நேரிடும். ஊழியர்களை பாதுகாக்கும் உங்கள் அணுகுமுறை யாருக்கும் உகந்ததாக இருக்காது.

மிதுனம்: தினசரி நடவடிக்கைகளிலிருந்து ஒரு இடைவெளி எடுக்கப் போகிறீர்கள். உங்களை புத்துணர்வூட்ட உல்லாசப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது. பிறரிடமிருந்து இயல்பாகவே உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும் சூழ்நிலைகள் உள்ளது. மனம் விரும்புபவருக்கு நெருக்கமாகும் நடவடிக்கைகளை எடுப்பீர்கள்.

கடகம்: வேலையிடத்தில் அற்புதமான மற்றும் சிறந்த நாளாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தையின் போது விவேகமும், சாதுரியமும் தேவைப்படும். ஒரு ஆர்டரை நிறைவு செய்வது அல்லது புதிய பொருட்களை அறிமுகப்படுத்துவது, விளம்பரப்படுத்துதல் என எந்த வேலையாக இருந்தாலும் உங்களின் தலைமைப்பண்பு அதில் மிளிரும்.

சிம்மம்: சூழ்நிலை சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக இருக்குமா? என்ற சூழ்நிலையில், உங்களுக்காக உற்சாகமான செய்தி உள்ளது. நற்செய்திகளை வழங்கும் நாள் இது என்பதை உறுதியாக சொல்ல முடியும். அதிலும் குறிப்பாக பணிச்சூழலில், உங்களின் திறன்கள் இன்றியமையாதது என்று உணரப்படும் நாள் இன்று.

கன்னி: பிறருடன் இணக்கமான தகவல் தொடர்பு கொள்வதும், கலைத்திறனும் உங்களுடைய சிறப்பான ஆயுதங்கள். உங்களிடம் ஆக்கப்பூர்வமான சிந்தனையும், மகிழ்ச்சியைப் பரப்பும் எண்ணமும் நிறைந்திருக்கும். இருந்தாலும், ஏதேனும் அழுத்தம் அல்லது கட்டாயம் ஏற்பட்டால் மட்டுமே, உங்கள் கற்பனைத்திறன் முற்றிலுமாக வெளிப்படும்.

துலாம்: மிகவும் செல்வாக்குமிக்க ஒரு நண்பரால் அதிர்ஷ்டம் ஏற்படும். எந்தவொரு தடையுமின்றி புதிய கூட்டு வணிகம் ஒன்றைத் தொடங்கலாம். உங்கள் செயல்திறன் மற்றும் கடின உழைப்புக்குப் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிகம்: இதுவரை, அதிகபட்ச உயரங்களைத் தொட்ட நீங்கள் இன்று தொழில்ரீதியான தாழ்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலதிகாரி மற்றும் சக ஊழியர்களின் எண்ணங்கள் சிறிது வருத்தத்தை ஏற்படுத்தும். எப்படியிருந்தாலும், இந்த நாளின் முடிவில் நீங்கள் சரியானவற்றைச் செய்வீர்கள். புதியவர்களுக்கு சில தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு: எல்லா பொருட்களிலும் அழகும் பிரகாசமும் இருப்பதாகத் தோன்றும். நீங்கள் இன்று ஒரு ஆர்வலராக செயல்படலாம். நீதி நேர்மைக்காக உண்மையான உறுதியுடன் செயல்படுங்கள். அநீதி மற்றும் பாகுபாட்டை எதிர்க்கலாம். உலகைக் கைப்பற்றுவது உங்கள் விருப்பம் என்றால் கூட அதையும் இன்று உங்களால் செய்ய முடியும்.

மகரம்: அங்குமிங்கும் அலைந்து திரிந்து இன்றைய வேலையை செய்து முடித்த பிறகு, எதிர்காலத்திற்காக என்ன செய்யலாம் என்பதை திட்டமிட, நாளின் எஞ்சிய பகுதியைச் செலவிடுவீர்கள். திடீர் லாபம் கிடைக்கலாம். இருப்பினும், அந்த லாபத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி ஒரு நல்ல திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

கும்பம்: எதிர்கால திட்டங்களால் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக உணர்வீர்கள். திட்டங்கள் பரவாயில்லை என்றாலும், யதார்த்த சூழ்நிலையில் வாழ்ந்தால்தான் அதற்கான சக்தியைப் பெற முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பணியிடத்தில், ஏற்கனவே கிடைத்திருக்கும் நற்பெயருக்கு உங்களுடைய தாராள மனப்பான்மை மேலும் மெருகூட்டும்.

மீனம்: வாழ்க்கைக்கான நிதித் திட்டத்தைத் தீட்டுவது என்பது மிகவும் முக்கியமானது என்றாலும் கடினமானதும்கூட. இன்று உங்கள் ஆற்றலை இதற்காகவே செலவிடுவீர்கள். உங்களிடம் உள்ள ரொக்கத்தைத் தவறாக பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்படும் எதிர்பாராத நோயால் வருத்தம் ஏற்படும் என்றாலும், அது விரைவில் சரியாகிவிடும் என்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.