ETV Bharat / opinion

வளர்ச்சிக்கான திட்டத்தில் இந்தியாவின் இடர்பாடு: வறுமை ஒழிப்பா? அதிகரிக்கும் பொருளாதார சமத்துவமின்மையா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 10:37 PM IST

2014 முதல் 2022 வரை எட்டு ஆண்டுகளாக நுகர்வுச் செலவுக் கணக்கெடுப்பை நடத்தாமல், தேசிய பல பரிமாண வறுமை குறியீட்டை இந்தியாவின் வறுமைக் குறிகாட்டியாக மாற்றுவது அரசியல் உத்தியின் ஒரு பகுதியா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளன. அது குறித்து மிசோரம் மத்திய பல்கலைக்கழகத்தின் வர்த்தகத் துறை பேராசிரியர் முனைவர் என்.வி.ஆர் ஜோதிக் குமார் விவரிக்கிறார்.

Etv Bharat
Etv Bharat

ஐதராபாத்: கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏறக்குறைய 25 கோடி மக்கள் பல பரிமாண வறுமை குறியீடில் இருந்து வெளியேறி உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் நிதி ஆயோக் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுரையை நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் மற்றும் மூத்த ஆலோசகர் யோகேஷ் சூரி ஆகியோர் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு கொள்கை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி (OPHDI) ஆகியவற்றின் தொழில்நுட்ப உள்ளீட்டு கருத்துகளுடன் எழுதியுள்ளனர்.

இந்த கட்டுரையில் இருந்த தரவுகளின் அடிப்படையில், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார அடிப்பாடையில் அமைப்பின் வெளிப்படையான கருத்துகள் மூலம் சாத்தியமற்றதை கூட தனது அரசாங்கம் சாத்தியமாக்கி உள்ளதாக தெரிவித்தார்.

நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையின் படி இதுவரை அரசாங்கத் திட்டங்களின் பலன்களை அனுபவரிக்க தவறியவர்களை பிரதிநிதித்துவம் செய்வதால் அறிக்கையை வெறும் புள்ளி விவரங்களாக காண முடியாது என்று கூறினார். இருப்பினும், நிதி ஆயோக்கின் அறிக்கையை சாடிய காங்கிரஸ் கட்சி, நலிவடைந்த மக்களை நலத் திட்டங்கள் மற்றும் இலவச ரேஷன் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் இருந்து விலக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் சதி என்று குற்றம் சாட்டியது.

அதேநேரம், உலகிலேயே நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது என்ற மத்திய அரசின் தொடர்ச்சியான முழக்கங்களின் பின்னணியில், சில பொருத்தமான கேள்விகளை முன்வைக்கின்றன, இந்தியா 2047ஆம் ஆண்டிற்குள் வறுமை மற்றும் பசியில்லாத விக்சித் பாரதத்தின் பாதையில் நகர்கிறதா? நிபுணர்களால் எழுப்பப்பட்ட கோட்பாட்டு முறை மற்றும் அனுபவ ரீதியான கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டு உள்ளதா? 2005-20006 இந்தியாவில் நிதி ஆயோக்கின் ஆய்வறிக்கை, 2030 க்கு முன்னதாகவே பல பரிமாண வறுமை குறியீடு பாதியாக குறையும் மற்றும் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்கை அடைவதற்கான பாதையில் சரியாக உள்ளதாக என்ற கேள்விகளை எழுப்புகின்றன.

மேலும், போஷன் அபியான், அனீமியா முக்த் பாரத் மற்றும் உஜ்வாலா யோஜனா போன்ற அரசின் திட்டங்கள் பல்வேறு வகையான பற்றாக்குறையைத் குறைப்பதில் முக்கியப் பங்காற்றி உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளன. நிதி ஆயோக்கின் அறிக்கையின் படி, இந்தியாவில் 2013-14 நிதி ஆண்டில் பல பரிமாண வறுமை குறியீடு 29.17 சதவீதம் என்ற நிலை இருந்த நிலையில், 2022-23 நிதி ஆண்டில் 11.28 சதவீதமாக சரிவை சந்தித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

BIMARU என்று அழைக்கப்படும் சமூக மற்றும் பொருளாதார குறியீடுகளில் பின்தங்கி இருந்த பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல பரிமாண வறுமை குறியீடு கணிசமாக குறைந்து உள்ளதாக நிதி ஆயோக்கின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

உதாரணமாக, உத்தரபிரதேசத்தில் 5.94 கோடி மக்கள் பல பரிமாண வறுமை குறியீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பீகாரில் 3.77 கோடி பேரும், மத்திய பிரதேசத்தில் 2.30 கோடி மக்களும், ராஜஸ்தானில் 1.87 கோடி பேரும் வறுமை குறியீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களை மதிப்பீடுவதில் என்ன தவறு நடக்கிறது? :

நிதி ஆயோக்கின் அறிக்கையின் படி, தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் ஒரே நேரத்தில் ஏற்படும் இழப்புகளை அளவிடுகிறது. அது அனைத்தும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வருவது சாத்தியமா என்பது தான் நிபுணர்களின் கேள்வியாக உள்ளது.

பல பரிமாண வறுமை குறியீடு ஏற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கை அல்ல:

இந்திய பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ் உட்பட பல பொருளாதார வல்லுநர்கள் வறுமை கோட்டு அளவீட்டில் பல பரிமாண வறுமை குறியீடு பயன்படுத்துவதைப் பற்றி விமர்சித்து உள்ளனர். குறுகிய கால வாங்கும் திறனை கொண்டு பல பரிமாண வறுமை குறியீடு கணக்கிடப்படுவது என்பது ஊதியத்தின் மந்தமான வளர்ச்சிககன சமீபத்திய நடவடிக்கைகள் மற்றூம் தகவல்களையே பெற முடியும் எனத் தெரிவித்து உள்ளனர்.

வறுமை குறீயீடு பற்றிய தரவுகளின் இருக்கும் வறுமை:

2011ஆம் அண்டில் இருந்து பத்தாண்டுகளாக, இந்தியா எந்த அதிகாரபூர்வ வறுமைத் தரவையும் வெளியிடவில்லை. அவ்வப்போது துண்டு துண்டாக கிடைக்கப் பெறும் விரிவான தரவுகளின் அடிப்படையில் நாட்டில் வறுமையின் நிகழ்வுகள் பற்றிய பல்வேறு விளக்கங்களுக்கு வழிவகுத்தது.

இதன் விளைவாக, இந்தியாவில் அதிகாரபூர்வ தரவு இல்லாத நிலையில் வறுமை பற்றிய எந்த விவாதமும் சர்ச்சைக்குரியதாகவும் அர்த்தமற்றதாகவும் மாறுகிறது. நம்பகமான ஆதாரங்களில் இருந்து தரவு உண்மையானதாக இருந்தால், அதற்கான சான்றுகள் என்பது தேவையில்லை.

மேலும், சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் புள்ளியியல் அமைப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு நடத்திய நுகர்வு செலவின கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட அரசாங்கம் மறுத்துவிட்டது. 2021ஆம் ஆண்டு நடைபெற இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மறு உத்தரவு வரும் வரை 2024-25 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உண்மையான, விரிவான ஆதாரமிக்க தரவுகள் இல்லாததால், நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் எண்களைத் தீர்மானிக்க கணிப்புகளை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்படி கிடைக்கும் ஆய்வறிக்கைகள் திட்டமிடப்பட்ட தரவுகளின் அடிப்படை யதார்த்தத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கலாம்.

ஆண்டுக்கு 7.9 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் என்பது சமீபத்திய ஒன்பது ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 5.7 சதவீதமாக குறைந்த காலத்திற்கு ஏற்ற முடிவுகளை வழங்கும் என்று கருதுவதற்கு முதன்மையான காரணமாக இருக்க இயலாது. மேலும், கரோனா காலக்கட்டத்தில் தேசிய பல பரிமாண வறுமை குறியீட்டின் 12 அலகுகளும் மோசமாக பாதிக்கப்பட்டன.

இருப்பினும், நிதி ஆயோக்கின் அறிக்கையில், ஆசிரியர்கள் தங்கள் முடிவுகளை கரோனா தொற்றிக்கு அப்பால் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மற்றொரு திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இதை வேறு விதமாக கூறும் போது, ஆய்வாளர்கள் கரோனா அல்லாத ஆண்டுகளுக்கான தரவைப் பயன்படுத்தி, கரோனாவிற்கு பிறகு, 2022 மற்றும் 2023 வரை முன்னேற்றத்தின் தொற்று அல்லாத விகிதங்களை நீட்டித்தனர். எனவே, இதுபோன்ற நியாயமற்ற அனுமானங்கள் மற்றும் முறையான பிழைகள் அறிக்கையின் கண்டுபிடிப்புகளை மிகவும் கேள்விக்குரியதாகவும் குறைபாடுடையதாகவும் மாற்றுகிறது.

முரண்பாடாக, விஸ்வ குரு என்று கூறிக்கொள்ளும் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் மற்றும் 2047க்குள் விக்சித் பாரதத்தை இலக்காகக் கொண்ட இந்தியா, அதன் சொந்த தொழில்சார் புள்ளியியல் அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பைக் காட்டிலும் சில தனிநபர்கள் அல்லது வெளி நிறுவனங்களால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையே சார்ந்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : உடற்பயிற்சியில் ஆர்வமில்லையா? ரத்தசோகை இருக்கலாம்! எச்சரிக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.