ETV Bharat / international

அமெரிக்காவாழ் வெளிநாட்டவர்கள் விசாவை புதுப்பிக்க இனி அலைய வேண்டியதில்லை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 3:10 PM IST

H1B Visas Renewal: அடுத்த 5 வாரங்களில் 20,000 தகுதி வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் H1B விசாக்களை உள்நாட்டில் புதுப்பிக்க முடியும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

20,000 விண்ணப்பங்களுக்கு அனுமதி
அமெரிக்காவாழ் வெளிநாட்டவர்கள் விசாவை புதுப்பிக்க இனி அலைய வேண்டியதில்லை

வாஷிங்டன்: இந்தியர்கள் உட்பட H1B தொழிலாளர்கள், அமெரிக்காவை விட்டு வெளியேறாமல் தங்கள் விசாக்களை உள்நாட்டிலேயே புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக அடுத்த 5 வாரங்களில் 20,000 தகுதி வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் H1B விசாக்களை உள்நாட்டில் புதுப்பிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தொழில்சார் மனித வளங்கள் அதிகம் இல்லாத காரணாத்தால் அந்த பணிகளுக்காக வெளிநாட்டவர்களை தற்காலிகமாக நியமிக்க அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. அவ்வாரு பணிகளுக்காக வரும் தொழிர்நுட்ப நிபுணர்களுக்கு விசா வழங்கவும் அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அவ்வாரு வழங்கப்படும் விசாக்களில் குடியேற்ற உரிமை உள்ள விசா, குடியேற்ற உரிம இல்லாத விசா என 2 வகைகள் உள்ளன. தற்காலிகமாக அமெரிக்காவில் தங்குபவர்களுக்கு குடியேற்ற உரிமை அல்லாத விசாக்கள் வழங்கப்படும். இந்த வகை விசாக்கள் H1B விசா வகையின் கீழ் வரும்.

இந்நிலையில் அமெரிக்க அரசு ஆண்டுதோரும் குறிபிட்ட எண்ணிக்கையிலான H1B விசாக்களை வழங்குகிறது. H1B விசாக்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் குலுக்கல் முறையில் விசாக்கள் வழங்கப்படும். பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக இந்த வகை விசாவிற்கு விண்ணப்பிக்கின்றனர்.

இந்த விசா வழங்கப்பட்டதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு செல்லும், அதன் பின்னர் விசாவை நீட்டிக்க சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்று அங்குள்ள தூதரங்கள் மூலம் விசா விசாவை நீட்டிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. 3 ஆண்டுக்ளுக்கு ஒருமுறை சொந்த நாட்டிற்கு சென்று விசா புதுப்பிப்பு செய்வது பல்வேறு தரப்பினருக்கும் பெரும் பின்னடைவாக இருந்ததாக கருதப்பட்டது.

இதனிடையே ஜூன் 2023 இல், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது அங்குள்ள இந்திய வம்சாவெளியினரிடம் உரையாடையில் H1B விசா புதுப்பிப்பை அமெரிக்காவிலேயே செய்து கொள்ளலாம், இந்த முடிவு அமெரிக்காவில் வசிக்கும், வேலை செய்யும் மற்றும் வேலை செய்ய விரும்பும் இந்திய குடிமக்களின் சுமையை குறைக்கும் என்றார்.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து கொண்டே எச்1பி விசாவை புதுப்பிக்கும் நடைமுறை தற்போது அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் அங்குள்ள தூதரங்களுக்கு சென்று எச்1பி விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் கடந்த வாரம் ஏஜென்சியின் இணையதளத்தில் விசா விண்ணப்பப் படிவத்தை நிரப்பலாம் என கூறப்பட்டது. இதையடுத்து வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்ட இணையதளம் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் தகுதியை உறுதிப்படுத்த அனுமதித்தது.

இதற்காக அடுத்த 5 வாரங்களில் தங்கள் H1B விசாக்களை உள்நாட்டில் புதுப்பிக்க 20,000 தகுதி வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசா செயல்முறைகளை எளிதாக்குவதற்கு அந்நாடு இந்த முயற்சியை எடுத்துள்ளது.

“இந்நிலையில் அமெரிக்கா இன்று வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக விசா ஸ்டாம்பிங் முயற்சியை தொடங்கியுள்ளது என்ற அறிவிப்பைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முயற்சியானது சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளுக்கான விசா செயல்முறையை சீரமைத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விண்ணப்பதாரர்கள் விசாவைப் புதுப்பிப்பதற்காக வெளிநாடு செல்ல வேண்டிய தேவையை இது நீக்கும்" என்று குடியேற்றப் பிரச்சனைகளுக்கான முக்கிய வழக்கறிஞர் அஜய் பூடோரியா கூறினார்.

மேலும் "இந்த நேர்மறையான மாற்றம் அமெரிக்காவில் பணிபுரிய அழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நபர்களுக்கு பயனளிக்கும் மற்றும் நமது நாட்டின் நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று பதுரியா மேலும் கூறினார்.

இந்நிலையில், டிசம்பரில் குறிப்பிடப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் H1B பணியாளர்களுக்கு மட்டுமே இப்போதைய முன்முயற்சி வரையறுக்கப்பட்டுள்ளது. H4 விசாக்களில் மனைவி மற்றும் குழந்தைகள் போன்ற சார்பு விசா வைத்திருப்பவர்களுக்கு இவை இல்லை என்பது தொழிலாளர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த திட்டம் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், மற்ற விசா வகைகளுக்கும், தனிநபர்களுக்கும் திட்டத்தின் தகுதியை விரிவுபடுத்துவதற்கு DOS தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி.. இத முதல்ல படிங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.