ஆப்கானிஸ்தானில் இந்திய விமானம் விபத்து? டிஜிசிஏ விளக்கம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 21, 2024, 2:19 PM IST

Updated : Jan 23, 2024, 8:03 PM IST

Etv Bharat

India Plane Crashes In Afghanistan: இந்திய விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அரசு அறிவித்த நிலையில், அதை இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

காபூல் : ஆப்கானிஸ்தானில் இந்திய விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து உள்ளது.

  • The unfortunate plane crash that has just occurred in Afghanistan is neither an Indian Scheduled Aircraft nor a Non Scheduled (NSOP)/Charter aircraft. It is a Moroccan registered small aircraft. More details are awaited.

    — MoCA_GoI (@MoCA_GoI) January 21, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆப்கானிஸ்தானின் பதக்‌ஷான் மாகாணத்தில் உள்ள மலை பிரதேச பகுதியில் நேற்று (ஜன. 20) இரவு இந்த விமான விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மலைப் பிரதேச பகுதியில் விபத்து நடந்த நிலையில், இன்று (ஜன. 21) காலை உள்ளூர் மக்கள் அளித்த தகவலை தொடர்ந்து விமான விபத்து நடந்தது தெரியவந்ததாக ஆப்கானிஸ்தான் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

விமான விபத்து சீனா - தஜிகிஸ்தான் எல்லையோர பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையில் விபத்துக்குள்ளான விமானம் இந்தியாவை சேர்ந்தது என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதேநேரம் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை என இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், ஆப்கானிதானில் ஜனவரி 20ஆம் தேதி இரவு விபத்துக்குள்ளான விமானம் இந்தியாவுக்கு சொந்தமானது இல்லை என்றும், அது மொராக்கோ நாட்டில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக விபத்துக்குள்ளானது வணிக பயன்பாட்டு ரக விமானம் என்றும், அது இந்தியாவில் இருந்து மாஸ்கோவிற்கு உஸ்பெகிஸ்தான் வழியாக சென்றதாகவும் கூறப்பட்டது. மருத்துவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் அந்த விமானம் பிரான்ஸ் தயாரிப்பான டசால்ட் பால்கன் 10 ஜெட் வகையை சேர்ந்தது என்றும் அந்த விமானத்தில் 6 பேர் பயணித்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இந்த தகவல் அனைத்தையும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

இதையும் படிங்க : கோதண்டராமர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!

Last Updated :Jan 23, 2024, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.