ETV Bharat / health

Heat stroke: கால்நடைகளுக்கும் வெக்கை வாதம்: தற்காத்துக்கொள்ள சில வழிகாட்டுதல்கள்.! - Livestock affected by heat wave

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 10:59 PM IST

கோடை வெயில் காரணமாக மனிதர்களுக்கு மட்டும் அல்ல, பசுக்கள், ஆடுகள் உள்ளிட்ட வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கும் ஹீட் ஸ்ட்ரோக் வரலாம் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கால்நடைகள் கோப்புக்காட்சி
கால்நடைகள் கோப்புக்காட்சி (Getty Image)

சென்னை: தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு என்பது மிக முக்கியமான வாழ்வாதாரத்தில் ஒன்றாக உள்ளது. அதிலும், குறிப்பாக கிராமப்புறத்தை சேர்ந்த மக்கள் வீடுகளில் தங்கள் தேவைக்காக ஒரு பசுமாடாவது வைத்திருப்பார்கள். பலர் மாட்டு பண்ணைகளை வைத்தும் வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்த சூழல் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதீதமாக இருந்த நிலையில் வறட்சி மற்றும் இதனால் தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணத்தால் கோவை மாவட்டத்தின் மசினக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பசுக்கள் மற்றும் எருமைகள் உயிரிழந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பாலக்காட்டை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரான்சிஸிடம் கேட்டபோது, வெயில் மற்றும் அதனால் ஏற்படும் சூடு காரணத்தால் மனிதர்கள் எதிர்கொள்ளும் அனைத்து உடல்நல உபாதைகளும், கால்நடைகளுக்கும் ஏற்படும் என தெரிவித்தார். அதிலும் குறிப்பாக வெக்கை வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவும், கால்நடைகள் மிகுந்த சோர்வுடன் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

சூடு காரணமாக பாதிக்கப்பட்ட கால்நடைகளின் அறிகுறிகள்.!

  • அதீத சூட்டின் தாக்கம் இருந்தால் கால்நடைகள் மூச்சு வாங்கும்
  • உணவு உட்கொள்ளாது
  • கண்கள் சிவந்து காணப்படும்
  • கண்களில் நீர் வடியும்
  • வாயில் எச்சில் வடிந்துகொண்டே இருக்கும்
  • சிறுநீர் கழிப்பதில் குறைவு இருக்கும்
  • தோலில் கொப்புளங்கள் வரலாம்

இப்படி இன்னும் பல்வேறு அறிகுறிகள் காணப்படலாம். என மருத்துவர் பிரான்சிஸ் கூறினார்.

இந்த சூட்டில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது எப்படி?:

  • வெயில் நேரங்களில் கால்நடைகலை மேய்ச்சலுக்கு கூட்டிச்செல்லக்கூடாது
  • அதிலும் கருப்பு, இளம் கருப்பு மற்றும் கருப்பு வெள்ளை நிறம் கலந்த மாடுகளை வெயில் நேரத்தில் மேச்சலுக்கு விடக்கூடாது. காரணம் அந்த நிறம் வெயிலின் மொத்த தாக்கத்தையும் உட்கிரகிக்கும்
  • கால்நடைகளுக்கு காலை மற்றும் மாலை நேரம் அல்லாது இடை நேரங்களிலும் சுமார் 4 முதல் 5 முறை தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும்
  • நாள்தோறும் காலை மற்றும் மாலை அல்லது ஏதாவது ஒரு நேரமாவது கால்நடைகளின் மீது தண்ணீர் ஊற்றிவிட வேண்டும்
  • பசுந்தீவனங்களை அதிகம் உட்கொள்ள கொடுக்க வேண்டும்

வெயில் அதிகமாக இருக்கும் நிலையில், பசுந்தீவனத்திற்கு கடுமையான தட்டுப்பாடுகள் இருக்கலாம். இந்த சூழலில் கால்நடை வளர்போர், ஊறுகாய் புல் பதப்படுத்துதல் (Silage), அசோலா (Azolla) பயன்படுத்துதல், மண் இல்லாமல் தீவனம் வளர்ப்பு முறைகள் (Hydroponics) உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கால்நடைகளுக்கான பசுந்தீவன பற்றாக்கறையை நிவர்த்தி செய்யலாம் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: தீவனம் இன்றி நாட்டு மாடுகள் தொடர் உயிரிழப்பு.. அரசுக்கு வலுக்கும் வறட்சி கோரிக்கை! - Cows Die Due To Extreme Drought

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.