ETV Bharat / health

பணியிடங்களில் பெண்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் மாதவிடாய் நிறுத்த அறிகுறிகள்: நிறுவனங்கள் எப்படி உதவலாம்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 5:49 PM IST

Menopause at workplace: பெரும்பாலான பெண்கள் பணியிடங்களிலிருந்து விரைவில் ஓய்வு பெற இது தான் முக்கிய காரணமாக உள்ளது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதனைத் தடுப்பதற்கு நிறுவனங்கள், அலுவலகங்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

நிறுவனங்கள் எப்படி உதவலாம்?
பணியிடங்களில் பெண்களுக்கு சுமையை ஏற்படுத்தும் மாதவிடாய் நிறுத்த அறிகுறிகள்

சிட்னி: பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான சம உரிமை வேண்டும் என்பது வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே இருந்து வந்த சூழலில், தற்போது அது குறித்த புரிதல்களும், செயல்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவ, மாணவியர் இருவருக்கும் தங்களது உடல் குறித்த கல்வி, முறையாகக் கற்பிக்கப்பட வேண்டும் என கல்வி நிறுவனங்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, மாதவிடாய் குறித்த விழிப்புணர்வுகள் பாரபட்சமின்றி மாணவ, மாணவியர் இருவருக்கும் கற்பிக்கப்பட்டு வருகிறது.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் மாணவ, மாணவியர்களிடம் பேசப்படுகிறது. இதனால், தொடர்ந்து குடும்பங்களுக்குள்ளும் மாதவிடாய் குறித்த விவாதங்கள் நடக்கத் தொடங்கியுள்ளது. இது ஒரு நேர்மறையான தொடக்கமாகக் கருதப்படுகிறது.

மாதவிடாயானது ஒரு பெண்ணுக்கு தன் 10-12 வயதில் தொடங்கி 40-45 வயதில் முடிவடைந்து விடுகிறது. இதன் பின்னர், பெண்கள் எந்த தொந்தரவுகளுமின்றி மகிழ்ச்சியாகத் தினசரி வாழ்க்கையை அனுபவிப்பார்களா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

கிட்டத்தட்ட தன் வாழ்நாளில் 30 ஆண்டுகளுக்கு மாதவிடாயை எதிர்கொள்ளும் பெண்கள். அதன் பின்னர் அவர்களது, 40-60 வயதில் மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிறுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இது குறித்த புரிதல்கள் பெண்களிடமே அதிக அளவில் இருப்பதில்லை. பெண்கள் 40 - 60 வயது காலகட்டத்தில் அவர்களது வழக்கமான மாதவிடாய் நின்று விடுகிறது. இதனால், அவர்களது உடலில் பல சோர்வுகள், அசெளகரியங்கள், தொந்தரவுகள் ஏற்படுகிறது. இந்நிலையில், மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களான மைக்கேல் ஓ'ஷியா, டேனியல் ஹோவ், மைக் ஆர்மர் மற்றும் சாரா டஃபி ஆகியோர் மெனோபாஸ் அறிகுறிகள் குறித்து விளக்கியுள்ளனர்.

மெனோபாஸ் பெண்களின் பணி வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பது பல காலங்களாக மறைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், ஆஸ்திரேலியா பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் மெனோபாஸ் குறித்து வெளிப்படையாகப் பேசியதைச் சுட்டிக்காட்டி இது மாறத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளனர். மெனோபாஸால் பொருளாதார, உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியாக ஏற்படும் விளைவுகளை ஆராய ஒரு விசாரணையை ஆஸ்திரேலியா பாராளுமன்றம் எடுத்துள்ளது.

மெனோபாஸ் அறிகுறிகள்: முகம், கழுத்து, மார்புப் பகுதிகளில் திடீர் வெப்பத்தை உணர்தல், பிறப்புறுப்பில் உலர் தன்மை, தோல் கருமையடைதல், தலைவலி, உணர்வுகளில் திடீர் மாற்றம், அதிக முடி உதிர்தல், பதட்டம், மனச்சோர்வு ஆகிய அறிகுறிகளுடன் அசௌகரியத்தை உணர்கின்றனர். சுமார் 25% பெண்கள் தங்கள் அன்றாட வேலை வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கும் அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள். இந்த உணர்வுகளைக் கடக்கப் பெண்கள் மிகவும் போராடி வருகின்றனர்.

மெனோபாஸ் ஏன் ஒரு பணியிட பிரச்சனை: இந்த மெனோபாஸ், பணியில் உள்ள பெண்களுக்கு பெரும் சவாலாக அமைகிறது. சில பெண்கள் வேலையிலிருந்து விரைவில் ஓய்வு பெறுவதற்கான காரணமாகவும் இருக்கிறது. ஆண்களை விடப் பெண்கள் விரைவில் ஓய்வு பெறுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்த மெனோபாஸ் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகளைத் தாண்டி தற்போது பணியிடங்களிலும் உடல் குறித்த கல்வியின் அவசியம் முக்கியமானதாக உள்ளது.

பணியிட கலாச்சாரத்தை மாற்றுவது முக்கியமானது: வேலை பாதுகாப்பு அல்லது தன் தொழில் முன்னேற்றத்தைப் பாதிக்கும் என எண்ணி ஊழியர்கள் இது குறித்துப் பேச அஞ்சி அமைதியாக இருக்கலாம். ஆனால், தடைகளை உடைப்பதில் பணியிடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மெனோபாஸ் அறிகுறிகளைப் பற்றிப் பேசக்கூடிய பாதுகாப்பான மற்றும் திறந்த பணியிட கலாச்சாரத்தைப் பெண்களுக்கு அமைத்துத் தரவேண்டியது அவசியம். அது குறித்த விழிப்புணர்வு, கல்வி அனைத்து பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மெனோபாஸ் குறித்துப் பேசுவது முக்கியமானது என்பதை பணியிடங்களில் முதலாளிகள் அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதும் அவசியம்.

வேலை இடங்களில் எவ்வாறு உதவலாம்: ஊழியர்கள் அலுவலகத்தில் அல்லது வீட்டில் என எங்கு வேலை செய்தாலும் அவர்கள் வேலை செய்யும் நேரத்தை அவர்களே தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும், அலுவலகங்களில் முறையான மின்விசிறிகள் அமைத்துத் தரப்பட வேண்டும், குளிர்ந்த குடிநீர், இயற்கை ஒளி, மாதவிடாய் காலத்தில் உபயோகிக்கும் பொருட்களை இலவசமாக வழங்குவது ஆகியவற்றைச் செய்து கொடுக்கலாம். கூடுதல் விடுப்பு உரிமைகள் வழங்கி, அது குறித்த முறையான கல்வியை வழங்குவது பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால், மாதவிடாய் நின்ற பெண்களுக்குக் கூடுதல் உரிமைகள் வழங்குவதன் மூலம் அவர்கள் பலவீனமாக அல்லது நம்பகத்தன்மை அற்றவர்களாகக் காணப்படலாம் என சிலர் வாதிடுகின்றனர். ஆனால் சரியான சூழ்நிலையில் விடுப்பு எடுப்பதன் மூலம் தங்களுக்கான நேரத்தை ஒதுக்கி அவர்களது அறிகுறிகளைச் சிறப்பாக நிர்வகிக்கவும், புதிதாக வேலைக்குத் திரும்பவும் உதவும்.

பணியிடங்களில் சுதந்திரத்தை அமைத்துத் தருவது பயனுள்ள பல உரையாடல்களுக்கு வழிவகுக்கும். மூத்த பணியாளர்கள் இதனை ஆதரிப்பதன் மூலம் இதன் மீதான தடைகளை உடைக்க உதவும். இதன் மூலம் பாதியில் ஓய்வு பெரும் நடைமுறை மாறி ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணியாற்ற முடியும்.

இதையும் படிங்க: இரவில் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன? அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.