ETV Bharat / health

திராட்சையில் பூச்சிக்கொல்லி.. அதை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்.! - How to wash grapes pesticide

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 3:10 PM IST

Updated : Apr 5, 2024, 6:08 PM IST

அதீத பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டு வளர்க்கப்படும் திராட்சைப் பழங்கள்.. வெறும் தண்ணீரில் கழுவினால் போதுமா? ஊட்டச்சத்து நிபுணர் ரியான் கூறிய தகவலைப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பூச்சிக்கொல்லி மருந்தில் குளித்து வரும் திராட்சைப் பழங்களை, உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் என்ற நோக்கத்தில் உட்கொள்ளும் அவல நிலை வாடிக்கையாளர்களுக்கு. பூச்சிக்கொல்லி தெளிக்காமல் மகசூல் ஈட்டவே முடியாது என்ற அச்சத்தில் விவசாயிகள். திராட்சைப் பழங்களில் அதீத பூச்சிகள் மற்றும் புழுக்கள் வருவதால் அதன் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதனால் வேறு வழியின்றி விவசாயிகள் திராட்சையின் மகசூலை அதிகரிக்கச் செய்யவும், பூச்சி மற்றும் புழுக்களிடம் இருந்து திராட்சை செடியைப் பாதுகாக்கவும் வேண்டி, செடி வைக்கப்பட்ட நாள் முதல் அறுவடைக்குத் தயார் செய்யும் வரை அடிக்கடி பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கின்றனர்.

அந்த திராட்சைகளை வியாபாரிகளிடம் இருந்து வாங்கி பொதுமக்கள் உட்கொள்கின்றனர். திராட்சைப் பழத்தில் உடலுக்குத் தேவையான அதீத வைட்டமின்கள் இருந்தாலும், பூச்சிக்கொல்லி மருந்தில் முக்கி எடுக்கப்பட்ட நிலையில் அதை அப்படியே உட்கொண்டால் புற்று நோய் வரும் அபாயம் உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர் ரியான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: வெயில் காலத்திலும் முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா.? இதை ட்ரை பன்னுங்க.! - Summer Face Care Tips

சரி என்னதான் செய்வது? திராட்சைகளை வாங்கி தண்ணீரில் கழுவிட்டு பலரும் உட்கொள்வோம். ஆனால் அப்படி உட்கொண்டாலும் பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் உடலுக்கு உள்ளே செல்லும் எனக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரியான். இந்நிலையில், திராட்சைப் பழங்களை எப்படிக் கழுவி உட்கொள்ள வேண்டும் என்ற தகவலைத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

திராட்சைப் பழங்களைக் கழுவும் முறை: திராட்சைப் பழங்களை முதலில் ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளுங்கள். அதில் குளிர்ந்த நீரை ஊற்றி பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

அதற்குப் பிறகு அந்த தண்ணீரை வடித்துவிட்டு நல்ல தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒருமுறை கழுவி விட்டு உட்கொள்ளுங்கள். நீங்கள் இவ்வாறு செய்யும்போது, திராட்சைப் பழத்தில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் குறையும். அதனைத் தொடர்ந்து நீங்கள் திராட்சைப் பழத்தை உட்கொள்ளலாம்.

இதையும் படிங்க: வெயில் காலத்திற்கான 7 ஹைட்ரேஷன் டிரிங்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க.! - 7 Hydration Drinks For Summer

Last Updated : Apr 5, 2024, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.