ETV Bharat / entertainment

கரு முட்டையை உறைய வைத்த நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.. காரணம் என்ன? - Mehreen Pirzada Egg Freezing

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 1:45 PM IST

Mehreen Pirzada: தனது திருமணம் குறித்தும் குழந்தைகள் பற்றிய எதிர்காலத்தை இன்னும் தீர்மானிக்காததால், தன்னுடைய கருமுட்டைகளை உறைய வைத்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தெரிவித்துள்ளார்.

MEHREEN PIRZADA EGG FREEZING
MEHREEN PIRZADA EGG FREEZING

சென்னை: நெஞ்சில் துணிவிருந்தால், பட்டாசு போன்ற திரைப்படங்கள் மூலமாக தமிழில் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. முதன் முதலில் தெங்கு திரைப்படமான கிருஷ்ணா காடி வீர பிரேமா கதா மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த பில்லெளரி என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானர். இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் அவர் தனது திருமணம், குழந்தைகள் பற்றிய எதிர்காலத்தை இன்னும் தீர்மானிக்காததால், பிற்காலத்தில் அது தொடர்பாக பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க தன்னுடைய கருமுட்டைகளை உறைய(Egg Freezing) வைத்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,"ஒருவரின் தனிப்பட்ட ஒன்றைப் பகிரலாமா? வேண்டாமா? என்று யோசித்தேன். ஆனால் என்னைப் போன்ற எத்தனையோ பெண்கள் எப்பொழுது திருமணம் செய்துகொள்வது அல்லது குழந்தை பெற்றுக்கொள்வது என்று இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார்கள் என்றுணர்ந்து, எதிர்காலத்திற்காக உங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்று தான் நினைத்ததால் தான் இது தொடர்பாக தான் பதிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனரீதியாக இதற்கு தயார்ப்படுத்திக் கொள்ள தனக்கு இரண்டு வருட காலம் தேவைப்பட்டதாகவும், பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க எல்லாப் பெண்களும் இதைச் செய்ய வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு தடைப்பட்ட தலைப்பு என்று கருதப்படுவதால், நாம் இதைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. தொழில்நுட்பத்தின் உதவியுடன், நமக்கான சிறந்த முடிவுகளை எடுக்க முடிகிறது, தாயாக வேண்டும் என்பது எனது கனவு, சில வருடங்கள் தாமதமாகிவிட்டதால் அதை தூக்கி எறிய விரும்பவில்லை.

ஊசி, ரத்தம் மற்றும் மருத்துவமனைகள் மீது ஃபோபியா உள்ள என்னைப் போன்ற ஒருவருக்கு. நான் மருத்துவமனைக்குச் செல்லும் போதெல்லாம் நான் மயக்கமடைகிறேன், எல்லா ஹார்மோன் ஊசிகளாலும் நீங்கள் அனுபவிக்கும் தொடர்ச்சியான உணர்ச்சிக் கொந்தளிப்பு எளிதானது அல்ல. நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ, அதை உங்களுக்காகச் செய்யுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

கருமுட்டைகளை உறைய வைத்தல் என்பது, 20 முதல் 30 வயதிற்குட்பட்ட ஒரு பெண் தன்னுடைய கருமுட்டையை வெளியே எடுத்து உறைய வைத்து நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கும் செயல்முறையாகும். இந்த முறை அறிவியலில் ஊசைட் ஃபிரீசிங்(oocyte Freezing) என அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: கோட் படத்தில் விஜயுடன் நடிக்க மறுத்த குண்டூர் காரம் நடிகை ஸ்ரீ லீலா! என்ன காரணம் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.