ETV Bharat / entertainment

'தலைவர் 171' படத்தில் இணையும் டாப் நடிகர்கள் யார்? எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகும் டைட்டில் டீசர்! - Thalaivar 171 Title Teaser

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 1:28 PM IST

Thalaivar 171 Title Teaser: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 171வது படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை வெளியாகிறது.

தலைவர் 171
தலைவர் 171

ஹைதராபாத்: பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 171வது படத்தின் டைட்டில் டீசர் இன்று (ஏப்ரல் 22) மாலை 6 மணிக்கு வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தனது முதல் படம் மாநகரம் முதல் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களில் தனது வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். விக்ரம் படத்திற்கு முன்பாகவே லோகேஷ் கனகராஜ் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்தது.

ஆனால், அப்போது ரஜினி வேறோரு படத்தில் நடிக்க கால்ஷீட் வழங்கியதால் நடிக்கவில்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகத் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் இந்த கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் எல்சியூவில்(LCU) இடம்பெறாது என லோகேஷ் ஏற்கனவே கூறியுள்ளார். 'தலைவர் 171' கைதி திரைப்படம் போல ஒருநாள் இரவில் நடக்கும் கதையாக இருக்கும் எனவும், ரஜினிகாந்த் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், ரன்வீர் சிங் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

லோகேஷ் விக்ரம் படம் முதல் தனது படத்தின் தலைப்பை டீசர் வீடியோவாக தயாரித்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் ரஜினிகாந்தின் 171வது படத்தின் டீசர் வீடியோ இன்று வெளியாகிறது. இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதையும் படிங்க: கல்கி 2898 ஏடி: 'நான் துரோணரின் மகன்.. அஸ்வத்தாமா!'.. அமிதாப் பச்சனின் ரோல் இதுதான்.. - Kalki 2898 AD Teaser

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.