இந்தியன் 2 வெளியீடு எப்போது? - தேர்தலை குறி வைக்கிறாரா கமல்ஹாசன்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 3:56 PM IST

மே மாதம் வெளியாகிறதா இந்தியன் 2

Indian 2 release date: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை வரும் மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு முதன்முறையாக ஷங்கருடன் இணைந்து அனிருத் இசையமைக்கிறார். இந்தியன் 2 திரைப்படத்தின் நீளம் கருதி, இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் இரண்டாம் பாகத்திற்கான அனைத்து கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்தியன் 2 படக்குழு, படத்தில் வரக்கூடிய CG மற்றும் VFX காட்சிகளுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட புதிய காட்சிகளுக்கான ஃகிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மே மாதம் வெளியாகிறதா இந்தியன் 2
மே மாதம் வெளியாகிறதா இந்தியன் 2

இந்தியன் முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில் அதிக CG மற்றும் VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஷங்கர் பாணியில் கட்டாயம் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 படத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் மார்ச் இறுதிக்குள்ளாக முடித்துவிட இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து #indian2 என ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: 'பெண்களை அழவைப்பவன் ஆண்மகன் அல்ல' - த்ரிஷா விவகாரம் குறித்து இயக்குநர் மிஷ்கின் ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.