ETV Bharat / entertainment

கேன்ஸ் விழாவில் கெளரவிக்கப்பட்ட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்! - Santosh Sivan Cannes award

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 7:09 PM IST

Santosh Sivan: பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கேன்ஸ் விழாவில், Pierre Angenieux ExcelLens in Cinematography என்ற விருதை பெற்றுள்ளார்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் புகைப்படம்
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் புகைப்படம் (credits - Getty)

பிரான்ஸ்: சமீபத்தில் நடைபெற்று முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு Pierre Angenieux ExcelLens in Cinematography என்ற விருதினை வழங்கி உள்ளனர். இந்த விருதானது ஆண்டுதோறும் ஒளிப்பதிவாளர்களுக்கு கொடுக்கப்படும் கெளரவ விருதாகும்.

சந்தோஷ் சிவன் தனக்கென ஒரு ஸ்டைலில் கதையை ஒளிப்பதிவில் காண்பிக்கும் திறனுள்ளவர். இவரின் காட்சிப்பதிவு திறனுக்கு இவரது அப்பா மிக முக்கிய காரணமாக அமைகிறார். சந்தோஷ் சிவன் கடந்த 1986ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நிதியுடே கதா என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

அதன்பின்னர், தமிழ், இந்தி, ஹாலிவுட் போன்ற பல துறைகளில் பணியாற்றினார். தமிழ் சினிமாவில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா மற்றும் தளபதி படங்களில் இவரது ஒளிப்பதிவு மிக அருமையாக இருக்கும். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் ஆவணப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கேன்ஸ் விழாவில் பேசிய அவர், "நான் மலையாள சினிமாவில் இருந்து அடிப்படைகளை கற்றுக் கொண்டேன். மேலும், நான் ஒரு மோசமான கணவர். எப்போதும் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பேன். என் குடும்பத்தினர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை" என்றார். மேடையில் மறைந்த பெற்றோர் மற்றும் சங்கீத் சிவனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிங்க: கேன்ஸ் திரைப்பட விழாவில் வரலாறு படைத்த இந்திய நடிகை அனசுயா சென்குப்தா! - Cannes Film Festival

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.