ETV Bharat / entertainment

"பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படிக்காத பக்கங்கள்" - படக்குழுவினர் கூறுவது என்ன? - Padikkatha Pakkangal

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 9:10 PM IST

Updated : May 12, 2024, 9:44 PM IST

Padikkatha Pakkangal: இயக்குநர் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி உள்ள படிக்காத பக்கங்கள் திரைப்படம் வருகின்ற 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

படிக்காத பக்கங்கள் படத்தின் போஸ்டர்
படிக்காத பக்கங்கள் படத்தின் போஸ்டர் (Photo credit to ETV Bharat Tamil Nadu)

படிக்காத பக்கங்கள் படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு (video credit to ETV Bharat Tamil Nadu)

சென்னை: இயக்குநர் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'படிக்காத பக்கங்கள்'. இந்தப் படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பௌர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தில் ப்ரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படிக்காத பக்கங்கள் திரைப்படம் வருகின்ற 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை வடபழனியில் எஸ் மூவி பார்க்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் செல்வம் மாதப்பன், தயாரிப்பாளர் முத்துக்குமார், நடிகர் ஆதவ் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய படக்குழுவினர், ”சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து பெண்கள் எவ்வாறு மீண்டு வர வேண்டும் என்பதை மையமாக வைத்துப் படிக்காத பக்கங்கள் திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டும். பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் இந்த திரைப்படத்தை தாங்கள் எடுத்திருக்கிறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த திரைப்படத்தை எடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

கூல் சுரேஷ் போன்றவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இது போன்ற திரைப்படங்களுக்கு மீடியாக்கள் கொடுப்பதில்லை. இது போன்ற திரைப்படங்களை வெற்றி பெறச் செய்யும்போது பலருடைய கனவுகள் இதன் மூலம் நிறைவேறும். புதியவர்களுக்கு இதன் மூலம் பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் உருவாகும்” எனக் கூறினர்.

இதையும் படிங்க: ”சம்பளம் கொடுத்து தான் நாம் வேலைக்குச் செல்கிறோம்”.. காப்புரிமை குறித்து வெற்றிமாறன் கருத்து! - Director Vetrimaaran

Last Updated : May 12, 2024, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.