ETV Bharat / entertainment

ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் 'உப்பு புளி காரம்' - Uppu Puli Karam Web Series

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 2:52 PM IST

Uppu Puli Karam Web Series: முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த புதிய இணையத் தொடரான 'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.

Uppu Puli Karam tami web series
Uppu Puli Karam tami web series

சென்னை: பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மக்களுக்கு அடுத்தடுத்து பொழுதுபோக்கு இணையத் தொடர்களை (Web Series) வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அண்மை காலங்களில் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இணையத் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தற்போது புதிய சீரிஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

'உப்பு புளி காரம்' என பெயரிடப்பட்ட இணையத் தொடரை இயக்குநர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். இந்த தொடரில் நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட சின்னதிரை நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றி இந்த தொடர் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த இணையத் தொடர் இளைஞர்களுக்கு மத்தில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெளியாகும் இந்த தொடரை விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியான புதிய படங்களின் அப்டேட்டுகள் இதோ..

சமீபத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியான மத்தகம், ஹார்ட் பீட், லேபிள் உள்ளிட்ட இணைய தொடர்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வர்வேற்ப்பை பெற்றுள்ளது. இதனிடையே சின்னதிரை தொடர்களுக்கு புகழ் பெற்ற விகடன் டெலிவிஸ்டாஸ் தற்போது ஓடிடி தளத்திற்காக தொடர் தயாரித்துள்ளது. இந்த நிலையில் 'உப்பு புளி காரம்' தொடர் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முன்னதாக ஹாட்ஸ்டார் என்று மட்டுமே இருந்த ஒடிடி தளம், உலகப் புகழ் பெற்ற பொழுதுபோக்கு தளமான டிஸ்னியுடன் இணைந்து பல பிரபல திரைப்படங்கள், சர்வதேச அளவில் ஹிட்டான கார்டூன் தொடர்கள் உட்பட ஏராளமானவை தற்போது இந்த ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. தமிழ், மலையாளம், ஹிந்தி உட்பட நாட்டின் பிரதான மொழிகளிளும் இந்த ஒலிபரப்பப்படுகிறது.

அந்தவகையில், திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பு பெற்ற மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படம் மற்றும் மலையாள பிளாக் பஸ்டர் படமான 'பிரேமலு' உள்ளிட்ட படங்கள் தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகி அதிக அளவில் மக்கள் பார்த்து வருகின்றனர். 'உப்பு புளி காரம்' இணைய தொடரும் இந்த வெற்றிப் பட்டியலில் இணையும் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸின் அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டார்... லோகேஷ் கனகராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.