ETV Bharat / entertainment

தலைவர் 171, கைதி 2 படப்பிடிப்பு எப்போது… லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்! - lokesh kanagaraj thalaivar 171

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 8:18 PM IST

lokesh kanagaraj thalaivar 171: தன்னுடைய இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் எனவும், அவரது படத்தை முடித்த அடுத்த மாதமே கைதி 2 படத்தின் பணிகள் தொடங்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நடிகர் கமல்ஹாசன் எழுதி தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள ஆல்பம் பாடல் 'இனிமேல்'. இதில் நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்து நடித்துள்ளார். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த பாடலில் நாயகனாக நடித்துள்ளார். இந்த பாடலின் வெளியீட்டு விழா இன்று (மார்ச்.25) சென்னையில் நடைபெற்றது. இதில், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் கலந்து கொண்டனர்.

விழாவில் பத்திரிகையாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், "நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லாம் இல்லை. எனக்கு கமல்ஹாசன் எவ்வளவு பிடிக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். அவரைப் பற்றித்தான் அதிகம் பேசியுள்ளேன். அவரது குரல் வீடியோவில் எதோ ஒரு இடத்தில் வருவதாக இருந்தால் எனது திரை வாழ்வில் சொல்லிக் கொள்ளும் படி இருக்கும் என்று தோன்றியது. இயக்குவதை விட இந்த வேலை சுலபமாக இருக்கிறது.

ரொமான்ஸ் காட்சிகளில் நிறைய டேக் வாங்கினேன். நான் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் பொல்லாதவன் எனக்குப் பிடித்த படம், அதுபோல ஒரு கதையை எழுதி எனது உதவியாளரை இயக்கச் சொல்லியிருப்பேன். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எனது வீடு, அங்கிருந்து எது வந்தாலும் என்னால் முடியாது என்று சொல்ல முடியாது. லியோ படத்தில் கமலிடம் வசனம் பேச வேண்டும் என்று சொன்ன போது அவரே ஐந்து மொழிகளில் பேசிக் கொடுத்தார்.

அதனால் அவர்கள் கேட்கும் போது முடியாது என்று சொல்ல முடியவில்லை. இதன் மூலம் கேமரா பயம் எனக்குக் கொஞ்சம் குறைந்துள்ளது. ரஜினியை வைத்து நான் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. எனது படங்களில் பெண் கதாபாத்திரங்கள் உயிரிழப்பது போன்று எடுப்பது பற்றிய கேள்விக்கு, எனக்கு ஆசை இல்லை.

ஆக்ஷன் படங்களில் என்ன செய்தால் ஆடியன்ஸ் எமோஷனல் ஆவார்கள் என்றால் யாரையாவது கொலை செய்தால் எமோஷனல் ஆவீர்கள், அதற்காகப் பண்ணுவது தான். எனக்குத் தொடர்ந்து கமிட்மென்ட் இருப்பதால் இதுபோன்ற பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ள முடியவில்லை. ரஜினிகாந்த் படத்தை முடித்துவிட்டு அடுத்த மாதமே கைதி 2 படத்தின் பணிகள் இருக்கிறது" என்றார். ஸ்ருதிஹாசன் பேசும் போது, "உங்களுக்கு எப்போது திருமணம் என்ற கேள்விக்கு, சத்தியமாகத் தெரியவில்லை என்றார்.

மேலும் இதற்குப் பிறகு லோகேஷ் கனகராஜை நடிக்கக் கூப்பிட்டாலும் கூப்பிடுவார்கள். ஒரு சுயாதீன பாடலுக்கு இவ்வளவு பெரிய கவனம் கிடைப்பது மிகவும் கடினம், அப்பாவுக்கு நன்றி. விக்ரம் படப்பிடிப்பு சமயத்தில் இவரைப் பார்த்த போது இவர் கேமிரா முன்னால் நன்றாக இருப்பார் என்று தோன்றியது. அதனால் தான் இதில் நடித்தார்" என்றார்.

இதையும் படிங்க: ஆடுகளம் பட நடிகை டாப்ஸி தனது நீண்ட நாள் காதலருடன் ரகசிய திருமணம்! - Actress Taapsee Marriage

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.