ETV Bharat / entertainment

ஏ.வி.ராஜுவின் அவதூறு கருத்து: சட்ட நடவடிக்கையை தொடங்கிய நடிகை த்ரிஷா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 12:33 PM IST

Updated : Feb 22, 2024, 1:18 PM IST

Actress trisha av raju issue : நடிகை த்ரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையான நிலையில் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடங்கியுள்ளது.

Actress Trisha took legal action on AV Rajus slanderous comment
நடிகை த்ரிஷா

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையான நிலையில் த்ரிஷா தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கும் விதமாக ஏ.வி.ராஜுவுக்கு வழக்கறிஞர்கள் மூலம் த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. அண்மையில் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “கூவத்தூரில் எம்எல்ஏக்களை விலைபேசி ஆட்சிக்கு வந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி என்று கூறியதோடு த்ரிஷாவின் பெயரைக் குறிப்பிட்டு ஆபாசமான கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும், இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் இதற்குக் கண்டனம் எழுந்தது. திரையுலகில் இருந்து சேரன், விஷால் , நடிகர் சங்கம், பெப்சி சங்கம் உள்ளிட்ட பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது. சமூக வலைத்தளா பக்கங்களில் ரசிகர்கள் த்ரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து நடிகை த்ரிஷா இதற்கு கண்டனம் தெரிவித்து அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “கவனம் ஈர்க்க எந்த நிலைக்கும் செல்லும் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது மிகவும் அருவருப்பானதாக உள்ளது. தன்னை பற்றி அவதூறு பேசியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது தனது வழக்கறிஞர் மூலம் அனுப்பியுள்ள நோட்டீஸை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தன்னைப் பற்றிய அவதூறு பேச்சுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக குறிப்பிட்ட பிரபல முன்னணி செய்தி நிறுவனங்கள் மூலமாக ஏ.வி.ராஜூ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து செய்தி வெளியிட்ட நிறுவனங்களும் அந்த செய்தியை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் எனவும், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னை பற்றி மன்சூர் அலிகான் அவதூறாக பேசியபோது கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுத்த த்ரிஷா தற்போது மௌனமாக இருப்பதாக கருத்து பரவிய நிலையில் இந்த நோட்டீஸ் மூலம் அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகை திரிஷா குறித்து அவதூறு - நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம்! ஆடியோ வெளியிட்டு எதிர்ப்பு!

Last Updated : Feb 22, 2024, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.