ETV Bharat / entertainment

உலகின் 100 செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலில் நடிகை ஆலியா பட்! - Actress Alia Bhatt

author img

By ANI

Published : Apr 18, 2024, 12:58 PM IST

Actress Alia Bhatt: பாலிவுட் சினிமாவிலும், பிசினஸிலும் கொடி பறக்கும் நடிகை ஆலியா பட், டைம்ஸ் பத்திரிக்கையின் 2024 உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

ஆலியா பட்
ஆலியா பட்

மும்பை: ஆண்டு தோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலை பிரபல ஆங்கில பத்திரிக்கையான டைம்ஸ் வெளியிடும். இதில் சர்வதேச அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள், பிரபலங்கள் இடம்பெறுவார்கள். சினிமா, அரசியல், விளையாட்டு, மக்கள் பணி ஆகிய பல்வேறு துறைகளில் இருந்து 100 நபர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் இந்த வருடமும் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலை டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவிலும், பிசினஸிலும் கொடி பறக்கும் நடிகை ஆலியா பட் 2024 உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் கங்குபாய் கத்தியவாடி படம் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்திற்காக நடிகை ஆலியா பட் தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

பாலிவுட்டில் வெற்றி நடை போடும் நடிகை ஆலியா தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்து, ‘ஹார்ட் ஆப் ஸ்டோன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தின் இயக்குநரும், பிரிட்டிஷ் எழுத்தாளருமான டாம் ஹார்பர், “ஆலியா பட் 2024 உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறித்து, “ஆலியா உண்மையான சர்வதேச நட்சத்திரம்.

அவர் மிக பிரபலமாக இருந்த போதிலும், படப்பிடிப்பின் போது மிகவும் பணிவாக நடந்து கொண்டார். ஆலியா தனது வேலையை செய்யும் விதத்தில் ஒரு கருணை உள்ளது” என்று தனது கட்டுரையில் ஆலியாவை புகழ்ந்து எழுதியுள்ளார். நடிகை ஆலியா, தனது சமூக வலைதள பதிவில் 2024 உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ள அவர், இயக்குநர் டாம் ஹார்பரின் புகழாரத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியர்களான நடிகர் தேவ் படேல், மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா ஆகியோரும் 2024 உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். கடந்த 2019 ஆண்டு வெளியான உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'நயன்தாரா ஆடினால் பார்க்கும் நீங்கள்..இவர்களையும் பாருங்கள்' - நடிகர் ராகவா லாரன்ஸ் - Actor Raghava Lawrence

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.