ETV Bharat / entertainment

விதார்த் - வாணி போஜன் நடிப்பில் அஞ்சாமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! - anjamai first look released

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 3:45 PM IST

Anjamai: அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அஞ்சாமை திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

அஞ்சாமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
அஞ்சாமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (photo credits - DreamWarriorPictures X page)

சென்னை: அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அஞ்சாமை. இப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை திருச்சித்ரம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் அனைத்து உரிமைகளையும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முதன்முதலாக அஞ்சாமை படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் பெற்று வெளியிடுகிறது. தற்போது இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், அஞ்சாமை படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் சுப்புராமன், இயக்குநர்கள் மோகன் ராஜா, லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். மனநல மருத்துவர், பேராசிரியர் என பல்வேறு துறைகளில் பணிபுரிந்தவர் டாக்டர் எம்.திருநாவுக்கரசு. இவர் இப்படத்தினை முதல் படமாக தயாரித்துள்ளார்.

இப்படமானது, தமிழகத்தில் செயல்பட்டு வந்த மருத்துவத் தேர்வு கல்வி முறையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர், கல்வி நிலையங்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் ஏற்பட்டன. நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகி இருக்கும் படம் தான் அஞ்சாமை.

இதையும் படிங்க: “சாமானியன் படத்தால் பலவற்றை இழந்தேன்..” - ராமராஜன் பட கதாசிரியர் பேச்சு! - Saamaniyan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.