ETV Bharat / education-and-career

அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்: பட்டதாரிகளின் நிலை என்ன? - unemployment rate in india 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 7:40 PM IST

இந்தியாவில் வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆண், பெண் உள்ளிட்ட பட்டதாரிகள் படிப்பிற்கு ஏற்ற வேலை இன்றி கிடைக்கும் வேலைக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

Unemployment rate 2024
Unemployment rate 2024 (Getty Images)

சென்னை: இந்தியாவில் படித்த ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பதில் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது என, இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையத்தின் (CMIE: Centre for Monitoring Indian Economy) ஆய்வு அறிக்கை கூறுகிறது.

இந்திய மாணவர்களின், கல்வி, திறன் மற்றும் வேலை வாய்ப்பு உள்ளடக்கி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை மனித மேம்பாட்டு நிறுவனம் (IHD) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆகியவை, "இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024" என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையத்தின் (CMIE: Centre for Monitoring Indian Economy) அறிக்கையிலும் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, கடந்த பிப்ரவரி (2024) மாதம் வரையிலான கணக்குப்படி தேசிய வேலை இன்மை விகிதம் என்பது 8 சதவீதமாக உள்ளது. ஜனவரி மாதத்தில் 6.57 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் ஒரே மாதத்தில் 8 சதவீதமாக உயர்ந்துள்ளது கவலைக்குறிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் கடந்த 2008ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 5. 41-ஆக இருந்த வேலையின்மை விகிதம் ஆண்டு தோறும் கூடிக்கொண்டே வருகிறது.

இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது காநிலை மாற்றம், பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தல், மக்கள் தொகை அதிகரிப்பு, இந்திய பொருளாதாரத்தால் ஏற்படும் தாக்கம், உற்பத்திதுறை நலிவு, விவசாயத்தில் முன்னேற்றம் இன்மை, தொழில் உள்ளிட்டவைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, சுழற்சி முறை பணி நியமனம், திடீர் பணி நீக்கங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

அதிலும் குறிப்பாக காநிலை மாற்றம் காரணத்தாலும், மழை பொழிவில் ஏற்பட்டுள்ள முறையற்ற சுழற்சியாலும் விவசாயிகள் பலர் பண்ணை தொழில்களில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். மேலும், இளைஞர்கள் பலர் சுயவேலை வாய்ப்பை உறுவாக்குவதிலும் ஆர்வம் காண்பிக்கின்றனர். இருந்தபோதிலும், பொருளாதார ரீதியாக பெரிய முன்னேற்றம் கானவில்லை என்றே ஆய்வுகள் கூறுகிறது.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 2023-ன் படி முக்கியமாக மார்க்க வேண்டிய மாநிலங்களின் பட்டியலை கீழே பார்க்கலாம். அதில் முதல் மூன்று இடங்களில் ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகியவை உள்ளன. தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்கள் இதில் சற்று பின்தங்கியே இருக்கிறது.

எண்மாநிலம்வேலையின்மை விகிதம்
1ஹரியானா 37.4
2ராஜஸ்தான்28.5
3பீகார்19.1
4ஜார்கண்ட்18
5ஜம்மு & காஷ்மீர் 14.8
6திரிபுரா14.3
7சிக்கிம்13.6
8கோவா9.9
9ஆந்திரபிரதேசம் 7.7
10ஹிமாச்சலபிரதேசம் 7.6
11அசாம்4.7
12சட்டீஸ்கர்3.4
13மத்தியபிரதேசம்3.2
14மஹாராஸ்டிரா3.1
15கர்நாடகா 2.5
16குஜராத்2.3
17ஒதிசா0.9

வேலையின்மை விகிதத்தை கட்டுக்குள் கொண்டுவர என்னென்ன செய்யலாம்.!

  • வேலை உருவாக்கத்தை ஊக்குவித்தல்
  • உற்பத்தி மற்றும் வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்துதல்
  • வேலைவாய்ப்பிற்கான தரத்தை உயர்த்துதல்
  • தொழிலாளர் சந்தை ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல்
  • தொழிலாளர் சந்தையின் கொள்கை, திறன் மற்றும் செயலை வலுப்படுத்துதல்
  • தொழிலாளர் சந்தை முறைகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை அவர்களிடம் கொண்டு சேர்த்தல்

உள்ளிட்ட பல காரணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதன் முலம் ஓரளவு வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் என ILO கூறியுள்ளது. மேலும், மாதம் தோறும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் இந்திய வேலையின்மை விகிதம் என்பது, உயரும் விகிதத்தோடு ஒப்பிடுகையில் குறையும் விகிதம் தொடர்ந்து குறைவாகவே உள்ளது. CMIE இன் வீட்டுக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் பிப்ரவரி 2024 இல் 8 சதவீதமாக இருந்த நிலையில் அது மார்ச் 2024 இல் 7.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேநேரம் ஜனவரி மாதத்தில் 6.57 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் திடீர் நீக்கம்! - Delhi Women Commission

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.