வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் உயர்வு: 3 ஆண்டுகளில் இல்லாத உச்சம்!

author img

By PTI

Published : Feb 10, 2024, 3:48 PM IST

Etv Bharat

EPFO interest: 2023-24 நிதி ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8 புள்ளி 25 சதவீதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி : கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2023-24 நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் முதலீடுகளுக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 25 சதவீதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் பொருளாதார சூழலுக்கு ஏற்ப தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி வகிதம் ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு ஆண்டுதோறும் கூட்டி வட்டி விகிதங்கள் குறித்து ஆலோசித்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

அதன்படி 2023-24 நிதி ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8 புள்ளி 25 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பு நிதி ஆண்டுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2022-23 நிதி ஆண்டுக்கான வட்டி விகிதத்தை 8 புள்ளி 14 ஆக நிர்ணயித்து அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதேபோல், 2021-22 நிதி ஆண்டில் தொழிலாளர்கள் முதலீடுகளுக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 1 சதவீதமாக இருந்தது. கரோனா உள்ளிட்ட சூழல் காரணமாக ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு பின்னர் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் கடந்த 1977 -78 நிதி ஆண்டு வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8 சதவீதமாக குறைத்து வழங்கப்பட்டது.

2023-24 நிதி ஆண்டுக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 25 சதவீதமாக நிர்ணயித்து வருங்கால வைப்பு நிதியின் மத்திய அறங்காவலர் குழு, மத்திய நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரைத்து உள்ளது. இந்த பரிந்துரை குறித்து விரைவில் முடிவு எடுத்து மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : கூகுள் பார்ட் ஏஐ ஜெமினி என பெயர் மாற்றம்: மாத சந்தா எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.