ETV Bharat / bharat

"தேர்தல் பிரசார உரிமை என்பது அடிப்படை உரிமையல்ல"- அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் குறித்து அமலாக்கத்துறை அறிக்கை! - Delhi Excise policy case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 7:08 PM IST

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது என்பது அடிப்படை உரிமையில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக வெள்ளிக்கிழமை இறுதி முடிவை வெளியிடுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

அமலாக்கத்துறை துணை இயக்குநர் பானு பிரியா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தேர்தல் பிரசாரம் செய்வதற்கான உரிமை என்பது அடிப்படை உரிமையோ அல்லது அரசியலமைப்பு உரிமையோ, சட்டப்பூர்வ உரிமையோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த அரசியல் தலைவருக்கும் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது இல்லை என்றும் ஒருவேளை அவர் வேட்பாளராக போட்டியிடாத பட்சத்தில் கூட அனுமதி வழங்கப்பட்டது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்காக காவலில் இருக்கும் போதும், தனது சொந்த பிரசாரத்திற்காக கூட இதுவரை எந்த வேட்பாளருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது இல்லை என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் ஒருவர் இருக்கும் பட்சத்தில் அவர் வாக்களிக்க அனுமதிப்பது என்பதை அவரது அரசியலமைப்பு உரிமையாக நீதிமன்ற கருதலாம் என்றும் அதற்கு இந்திய பிரதிநிதித்துவ சட்டம் அனுமதிக்கிறது என்றும் அமலாக்கத்துறை தரப்பில் முறையிடப்பட்டது.

நீதிமன்ற காவலில் இருந்து கொண்டு தேர்தல்களில் போட்டியிட்ட அரசியல்வாதிகள் குறித்தும் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற போதும் இடைக்கால ஜாமீன் கிடைக்காமல் போனது குறித்தும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது சட்டக் கொள்கைகளுக்கு முரணானது மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை சட்ட உரிமையை மீறுவதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒரு அரசியல்வாதி சாதாரண குடிமகனை விட உயர்ந்த சிறப்பு அந்தஸ்தை கோர முடியாது, மற்ற குடிமகன்களை போலவே குற்றங்களை செய்ததற்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவார் என்றும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நாளை (மே.10) தனது இறுதி முடிவை வெளியிடுகிறது.

இதையும் படிங்க: அரியானாவில் ஆட்சியை இழக்கிறதா பாஜக? நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு கடிதம்! - Haryana Political Crisis

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.