ETV Bharat / bharat

திருச்சூரில் யானைகள் நேருக்கு நேர் மோதல்.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்! - elephant fight in thrissur

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 5:17 PM IST

Elephant fight in Thrissur: திருச்சூர் கோயில் திருவிழாவின் இடையே, யானைக்கு மதம் பிடித்த நிலையில், இரண்டு யானைகள் ஆக்கோரஷமாக சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

elephant fight in Thrissur
elephant fight in Thrissur

elephant fight in Thrissur

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்தத் திருவிழாவின் போது, அலங்கரிக்கப்பட்ட யானைகள் எதிர் எதிர் திசைகளில் நின்று, முத்துக்குடை பரிமாற்றம் செய்யும் நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்நிலையில், நேற்று இரவு ஆறாட்டுப்புழா பூரம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான யானைகள் பிரிந்து செல்லும் நிகழ்வைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.

அப்போது, அலங்கரித்து அழைத்து வரப்பட்ட யானைகளில், ஒரு யானைக்கு எதிர்பாராத விதமாக மதம் பிடித்துள்ளது. இதனால் அந்த யானை தனது தந்தத்தால், அருகில் நின்ற யானையை ஆக்கோரஷமாக தாக்கத் தொடங்கியது. இந்நிலையில், இரண்டு யானைகளும் கடும் சண்டையில் ஈடுபட்டன.

இதனால், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவத்தில் மூன்று பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், இரவு 11 மணியளவில் யானைப் பாகன்கள் உதவியுடன் யானையை கட்டுக்குள் வரவழைக்கப்பட்டது.

இதையும் படிங்க: தென்காசி மைப்பாறை பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. மீட்புப் பணிகள் தீவிரம்! - Tenkasi Fire Accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.