ETV Bharat / bharat

பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன? முழு தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 7:22 PM IST

BJP Candidates List:எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 195 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது. அதில் 34 அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ள நிலையில் யாரார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

நட்சத்திர வேட்பாளர்களும் - போட்டியிடும் தொகுதிகளும்:

பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் மாநிலம் காந்தி நகரில் போட்டியிடுகிறார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், முன்னாள் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

கடந்த முறை உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிரிதி இராணி மீண்டும் அதே தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அருணாசல பிரதேசம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா குஜராத் மாநிலம் போர்பந்தரிலும், ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசம் குணா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரிலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோட்டா தொகுதியில் களம் காணுகின்றனர். கேரளாவை பொறுத்தவரை நடிகர் சுரேஷ் கோபி திருச்சூரிலும், அப்துல் சலாம் மலப்புரத்திலும், மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திர சேகர் திருவனந்தபுரத்திலும், முரளிதரன் ஆட்டிங்கால் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பீகானீர் தொகுதியிலும், ஆல்வாரில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், பார்மரில் மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, சித்தோர்கர் தொகுதியில் ராஜஸ்தான் பாஜக தலைவர் சிபி ஜோஷி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் 34 மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்களுக்கு மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மறுவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

அதுபோக 47 பேர் 50 வயதிற்கும் குறைவானவர்கள், 27 பட்டியலினத்தவர்கள், 28 பெண்கள் உள்ளிட்டோர் பாஜக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வாரணாசியில் பிரதமர் மோடி போட்டி! பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.