ETV Bharat / bharat

பாஜக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஒரு மத்திய அமைச்சருக்கு கூட மறுவாய்ப்பு இல்லை? பாஜகவின் திட்டம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 10:50 PM IST

BJP Rajya Sabha Candidates List: மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது. அமைச்சரவையில் பதவிக் காலம் முடிய உள்ள மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலுக்கான 14 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என் சிங், விரைவில் பதவிக்காலம் நிறைவடைய உள்ள உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுதான்ஷு திரிவேதி ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்து உள்ளன.

மேலும், உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட் பெயரும் மாநிலங்களவை பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்து உள்ளது. அதேநேரம், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று உள்ள பதவிக் காலத்தை நிறைவு செய்யும் ஒருவரின் பெயரும் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை.

இதன் மூலம், அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானோர் எதிர்வரும் மக்களவை தேர்தலில் களமிறங்க உள்ளது உத்தேசமாக உறுதியாகி உள்ளது. தற்போதைய அமைச்சரவையில் உள்ள பாஜக எம்.பிக்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வாய்ப்பு அளிக்கபடலாம் எனக் கூறப்படுகிறது.

மற்றபடி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜக முன்னாள் செய்திதொடர்பாளர் மற்றும் ஊடக பிரிவின் தலைவர் அனில் பலுனி உள்ளிட்டவர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பிடித்து உள்ளன. பீகாரில் இருந்து சுஷில் குமார் மோடி பெயர் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை.

இதையும் படிங்க : "நாட்டை கொள்ளையடிப்பது, பிளவுபடுத்துவதே காங்கிரசின் குறிக்கோள்" - பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.