ETV Bharat / bharat

நாளை அயோத்தியின் மன்னர்கள் வீடு திரும்புகின்றனர்.. கங்கனா ரனாவத்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 5:53 PM IST

Updated : Jan 22, 2024, 5:20 PM IST

நாளை அயோத்தியின் மன்னர்கள் வீடு திரும்புகின்றனர்
நாளை அயோத்தியின் மன்னர்கள் வீடு திரும்புகின்றனர்

Kangana Ranaut: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று (ஜன.21) அயோத்தி சென்றடைந்த நடிகை கங்கனா ரனாவத், அனுமன் கர்ஹி கோயிலில் சுத்தம் செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நாளை (ஜன.22) நடைபெறுகிறது. நாளை நண்பகல் 12.20 மணி அளவில் மூலவரான குழந்தை ராமர் சிலை கருவறையில் வைக்கப்படுகிறது.

  • आओ मेरे राम ।
    आज परमपूजनीय श्री रामभद्राचार्य जी से भेंट हुई, उनका आशीर्वाद लिया।
    उनके द्वारा आयोजित शास्त्रवत् सामूहिक हनुमान जी यज्ञ में भाग लिया।
    अयोध्या धाम में श्री राम के स्वागत में सब राममयी हैं। कल अयोध्या के राजा लम्बे वनवास के बाद अपने घर आ रहे हैं ।
    आओ मेरे राम, आओ… pic.twitter.com/XKxHHGIgh0

    — Kangana Ranaut (@KanganaTeam) January 21, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க, பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாளைய தினம் மத்திய அரசு அலுவலகத்திற்கு அரைநாள் விடுமுறை மற்றும் உத்தரப் பிரதேசம், புதுச்சேரி, ஹரியானா, மகராஷ்டிரா, அசாம், சண்டிகர், மத்தியப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களுக்கு பொது விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து இன்று (ஜன.21) காலை ரஜினிகாந்த் விமானம் மூலம் அயோத்தி புறப்பட்டுச் சென்றார். அதேபோல் நடிகர் தனுஷும் அயோத்திக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அந்த வகையில், நடிகை கங்கனா ரனாவத் இன்று அயோத்தி சென்றடைந்தார். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு யாகத்தில் அவர் கலந்து கொண்டார். மேலும், சுவாமி ராமபத்ராச்சாரியாரைச் சந்தித்தது குறித்தும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "இன்று (ஜன.21) மதிப்பிற்குரிய ஸ்ரீ ராமபத்ராச்சார்யாரைச் சந்தித்து ஆசி பெற்றேன். அவர் ஏற்பாட்டில் நடைபெற்ற அனுமன் சிறப்பு யாகத்தில் நான் பங்கேற்றேன். அயோத்தியில் ஸ்ரீ ராமரின் வரவேற்பு எங்கும் நிறைந்து காணப்படுகிறது. நாளை, அயோத்தியின் மன்னர்கள் நீண்ட வனவாசம் நிறைவு பெற்று வீடு திரும்புகின்றனர்" என தெரிவித்திருந்தார்.

மேலும், அயோத்தில் உள்ள அனுமன் கோயிலில் சுத்தம் செய்யும் வீடியோவையும் கங்கனா ரனாவத் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் இந்திய விமானம் விபத்து? டிஜிசிஏ விளக்கம் என்ன?

Last Updated :Jan 22, 2024, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.