தமிழ்நாடு

tamil nadu

காரனூர் சித்தேரியில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா!

By

Published : May 8, 2022, 5:31 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் காரனூர் சித்தேரியில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஏரிக்குள் இறங்கி மூங்கில் கூடை மற்றும் வலைகளை பயன்படுத்தி ஏரியில் உள்ள மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர். இந்த மீன்பிடித்திருவிழாவில் கெண்டை, விரால், கெளுத்தி,குறவா,மீசை விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பிடித்துச் சென்றனர். மேலும் கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மீன்பிடித் திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது இந்த ஆண்டு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்பிடித்து மீன்பிடி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடினர்.இந்த மீன்பிடி திருவிழாவில் காரனூர்,குதிரைசந்தல்,நல்லாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details