தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலை அங்கன்வாடி மையத்தில் வித்யாரம்பம்

By

Published : Oct 6, 2022, 10:26 AM IST

திருவண்ணாமலை: விஜயதசமியையொட்டி, நேற்று (அக்.5) ஆனைகட்டி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இரண்டு வயது முதல் ஐந்து வயது வரை குழந்தைகளை முன்பருவக் கல்வியில் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஆசிரியை செல்வி, அனைத்து குழந்தைகளுக்கும் நெல்லில் 'அ' என்ற தமிழின் முதல் எழுத்துகளை எழுதப் பயிற்றுவித்தார். இதில் பங்கேற்ற ஏராளமான மழலைகளுக்கு தேன், சாக்லேட்கள், பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details