தமிழ்நாடு

tamil nadu

இருசக்கர வாகனம் மோதிய வேகத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Oct 21, 2021, 7:08 PM IST

கோவை மாவட்டம் சோமனூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (57) இவரது மனைவி ஜெயலட்சுமி (47). ஜெயலட்சுமி இன்று (அக்.21) காலை மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு செல்ல சோமனூர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் ஜெயலட்சுமி மீது மோதியதில், நிலைதடுமாறி முன்னால் சென்ற லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கருமத்தம்பட்டி காவல்துறையினர் தப்பியோடிய இரு சக்கர வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த பதைபதைக்கும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details