தமிழ்நாடு

tamil nadu

பழனியில் ஆ. ராசாவின் உருவபொம்மை எரிப்பு!

By

Published : Mar 29, 2021, 10:18 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவின் பேச்சு தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்குக் கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம் நடத்திவருகின்றனர். அந்த வகையில், பழனி அருகே உள்ள சிந்தலவாடம் பட்டியில் அதிமுக சார்பில் கண்டன‌ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆ. ராசாவின் உருவபொம்மை தீவைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆ. ராசா இன்று மன்னிப்புக் கோரியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details