தமிழ்நாடு

tamil nadu

"காவல்துறைக்கு மனசாட்சி இல்லையா?" வைரலாகும் மாற்றுத்திறனாளியின் வீடியோ..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 8:14 PM IST

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வைரலாகும் மாற்றுத்திறனாளியின் வீடியோ

திருப்பத்தூர்: திருப்பத்தூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள், எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசியுள்ள நபர், தானும் தனது மகனும் ஆலங்காயம் பகுதிக்குச் சென்று திருப்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வரும் போது, குரிசிலாப்பட்டு காவல் நிலைய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருந்ததாகவும், சட்ட மீறல்கள் எதுவும் செய்யாத தங்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதேபோல் சில மாதங்களுக்கு முன்னர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்ததாகவும், அது குறித்துக் கூறும் போது "போலீசாருக்கு மனசாட்சி என்பதே இல்லையா?" என்று ஆதங்கத்துடன் கூறினார். மேலும் தான் விபத்தில் காலை இழந்துள்ள நிலையில், ஒரு நாளுக்கு 200 அல்லது 300 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் சூழலில் தனக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தால் தான் செய்வதறியாது இருப்பதாகவும் சோகத்துடன் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details